'பாரத் மாதா கி ஜெய்' சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம்: யோகா குரு ராம்தேவ் பேச்சால் சர்ச்சை
ரோட்டக்: இந்தியாவில் சட்டம் என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் ''பாரத் மாதா கி ஜே' என சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம் என்று யோகாகுரு ராம்தேவ் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் எழுப்ப வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி இருந்தார். இதற்கு இந்துத்துவா அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் ஹரியாணா மாநிலம் ரோட்டக்கில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராம்தேவ், இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இல்லை என்றால் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம் என்று குறிப்பிட்டார்.
பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்தினை எந்த மதமாவது தடை செய்தால், அது தேச நலனுக்கு எதிரானது என்றுதான் அர்த்தம் என்றும் கூறி உள்ளார்.
இதையடுத்து ராம்தேவுக்கு எதிராக முன்னாள் உள்துறை அமைச்சர் சுபாண் பத்தா தலைமையில் சிவில் சமூக உறுப்பினர்கள் இன்று போலீசில் புகார் அளித்துள்ளனர்.
முன்னதாக கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் ‘பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எழுப்ப மாட்டேன் என மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி கூறியிருந்தார். இதுபோன்று பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ராம்தேவின் இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications