யோகா இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது! மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சியை.. சீர்குலைத்த மர்ம கும்பல்!
மாலே: மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் திடீரென போராட்டக்காரர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 8ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பல நூறு ஆண்டுகள் பழமையான யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

யோகா தினம்
யோகா தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, மைசூருவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாடு முழுவதும் மிகவும் கோலாகலமான முறையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்தச் சூழலில் மாலத்தீவில் இந்தியா சார்பில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மாலத்தீவு
மாலத்தீவின் தலைநகரான மாலேயில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்தில் இந்தியத் தூதரகம் சார்பில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று பிரச்சினையை உண்டாக்கினர். நிகழ்ச்சிக்கு முன், போராட்டக்காரர்கள் யோகா இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் யோகா செய்வது சூரியனை வழிபடுவதைப் போன்றது என்று நம்புவதால் அவர்கள் யோகா கலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோஷம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய கலாசார மையம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கும்பலின் குறுக்கீடு காரணமாக யோகா நிகழ்ச்சியைத் தொடர முடியவில்லை. யோகா தின நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி வந்தனர். அவர்களில் சிலர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்கள்
அந்த கும்பல் உள்ளே நுழைந்தபோது மாலத்தீவு அரசைச் சேர்ந்த பல தூதர்கள், முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கும்பல் உள்ளே புகுந்த பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் கூட இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

போலீசார்
அதில் அந்த தடிகளை கையில் வைத்து இருந்த அந்த கும்பல் யோகா செய்து கொண்டு இருப்பவர்களை நோக்கிச் சென்றது தெளிவாகப் பதிவாகி உள்ளது. மேலும், ராஜ்ஜே டிவி பகிர்ந்துள்ள வீடியோவில் போராட்டக்காரர்கள் அந்த இடத்தை அடித்து நொறுக்கிய வீடியோவும் பதிவாகி உள்ளது. நிலைமை தீவிரமடைவதற்குள் போலீசார் தலையிட்டு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டகாரர்களைக் கலைத்தனர்.

விசாரணை
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்தார். "மைதானத்தில் இன்று காலை நடந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு
ஜூன் 21ஐ சர்வதேச யோகா தினமாகக் கொண்டாட ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 177 நாடுகளில் மாலத்தீவும் ஒன்றாகும். இருப்பினும், மாலத்தீவில் மக்களில் ஒரு பகுதியினர் இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். யோகா நிகழ்ச்சிகளை நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். யோகா என்பது அங்குப் பற்றி எரியும் பிரச்சினையாக உள்ளது. இஸ்லாமியர்களில்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications