உ.பி பொருளாதாரத்தை வலுப்படுத்த முயற்சி! புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதாக மாநில அரசு கூறி வரும் நிலையில், மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வருபவர்களுக்கு உதவும் வகையில், 'உத்யமி மித்ரா யோஜனா' திட்டத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் முதலீடுகளை விரிவுபடுத்த வழிவகுக்கும் உத்யமி மித்ரா யோஜனா திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியனாக உயர்த்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தற்போது உத்யமி மித்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இந்த திட்டத்தின்படி மாநிலத்தில் முதலீடு செய்ய வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவ உத்யமி மித்ராக்கள் நியமிக்கப்படுவார்கள். மொத்தமாக 105 பணியிடங்கள் இந்த திட்டத்திற்காக உருவாக்கப்படும். இதில் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பெரிய அளவில் பயன்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications