இந்தியா பற்றி விமர்சனம் செய்யும் ஒபாமாவுக்கு அமெரிக்க இனவெறி பற்றி தெரியாதா? ஆதித்யநாத் சாடல்
வாரணாசி: இந்தியாவின் மத சார்பின்மை குறித்து பேசும் முன்பாக அமெரிக்காவின் இனவெறி பிரச்சினையை பராக் ஒபாமா தீர்த்துக்கொள்ளட்டும் என்று பாஜக எம்.பி யோகி ஆதித்யநாத் கூறினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு, வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து மதங்களும் பூத்து குலுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு நாட்டை குறை சொல்லும் ஒபாமா, முதலில் தனது நாட்டில் நடைபெற்றுவரும் இனவெறி தாக்குதல் பிரச்சினையை தடுத்து நிறுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாகவே, அமெரிக்காவின் சாலைகளில், மோசமான இனவெறி தாக்குதல் நடந்து வருகிறது. இந்தியாவில், இந்துக்களை போலவே, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களது மத வழிபாட்டை தடையின்றி நடத்திக் கொள்கின்றனர்.
அப்பாவி பழங்குடியினர், தலித்துகளை, சேவை என்ற பெயரில், கிறிஸ்தவ மிஷினரிகள் மதமாற்றம் செய்துவருகின்றன. அப்போது வாய்மூடி ஒத்துழைத்த, மதசார்பற்ற சக்திகள், இந்துக்கள் மதமாற்றத்தில் ஈடுபட தொடங்கியதுமே அலறுவது ஏன்?
நமது நாட்டில் ராமராஜ்யம் வேண்டும் என்றால், இந்துக்கள் ஒருபோதும் ஜாதி அடிப்படையில் பிளவுபட்டுவிடக் கூடாது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவது நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், "காந்தி இப்போது இருந்தால், இந்தியாவின் மதசார்பின்மையை பார்த்து ஷாக் ஆகியிருப்பார்" என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications