அனைவருக்கும் வீடு! உட்கட்டமைப்பை தலைகீழாக மாற்றும் யோகி ஆதித்யநாத்.. மாஸ் காட்டும் உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனைவருக்கும் வீடு எனும் கனவை நிறைவேற்றிட புதிய திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையடுத்து உத்தரப் பிரதேசத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேபோல மாநில அரசு சார்பிலும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை யோகி ஆதித்யநாத் அரசு நடத்திக்காட்டியது. அதேபோல சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பட்ஜெட்டிலும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

மேலும், உட்கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியிருந்தார். இப்படி இருக்கையில் உட்கட்டமைப்பு தொடர்பாக பல புதிய அறிவிப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்கிற திட்டம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "கடந்த 6 ஆண்டுகளில் நகரப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அபரிமிதமானது. இந்த வளர்ச்சி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியானது முற்றிலும் சாத்தியமாக வேண்டுமெனில் அனைவருக்கும் வீடு என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதுதான் மக்களின் வளர்ச்சியாகும். அவர்களை விட்டு விட்டு வெறுமென கட்டிடங்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? எனவே இந்த வளர்ச்சி அனைவருக்கமானதாக இருக்க வேண்டும்.
நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட இதற்கு முந்தைய நடவடிக்கைகளை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதிலிருந்த பிரச்னைகளை கவணத்தில் கொண்டு, அதேபோல மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் நகர்ப்புற வளர்ச்சி கொள்கைகளை ஆய்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் புதிய திட்டத்தை உருவாக்கி அதனை அமல்படுத்த வேண்டும்.
புதிய திட்டத்தின்படி பொழுதுபோக்கு அம்சங்கள் அதாவது தியேட்டர், மால்கள், ஷாப்பிங் காம்பிளக்ஸ்கள் ஆகியவை பூங்காக்களுக்கு அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலையமும் அருகாமையில் இருக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது" என்று யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார. இதற்கு அம்மாநில மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications