மாஸ் கிளப்பிய யோகி.. குற்றங்களை குறைக்க உ.பி. முதல்வர் எடுத்த அதிரடி.. காவல்துறைக்கு ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் மாநிலத்தின் சிறப்பு புலனாய்வு குழுவில் (SSIT) அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அம்மாநில பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு காரணம் இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் யாரும் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சராக நீடித்ததில்லை. எனவே யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

Yogi Aditynath decided to increase the number of Special Investigation Team to speedily investigate and complete pending cases

இந்த சாதனையை கொண்டாடும் விதமாக மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இப்படியாக சமீபத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான திட்டங்களை யோகி ஆதித்யநாத் அறிவித்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் இதனையடுத்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் மாநிலத்தின் சிறப்பு புலனாய்வு குழுவில் (SSIT) அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்" என்று கூறியுள்ளார்.

இது குறித்து சிறப்பு புலனாய்வுக்குழுவின் டிஜி ரேணுகா மிஸ்ரா கூறுகையில், "மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனை முடிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில சிக்கல்கள் இதில் இருக்கிறது. அதில் பிரதானமானது விசாரணை குழுவில் உள்ள நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள். இந்த பணியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.

Yogi Aditynath decided to increase the number of Special Investigation Team to speedily investigate and complete pending cases

இதனையடுத்துதான் முதலமைச்சர் யோகி ஆதியநாத் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தற்போது அறிவித்திருக்கிறார். இதில் இரண்டாவது சிக்கல், புதிய பணியிடங்களை உருவாக்குவது. அதாவது இந்த துறையில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. இதனை தீர்க்க கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட காலக்கெடுவில் விசாரித்து முடிக்கப்படும்" என்று கூறியுள்ளார். சிறப்பு புலனாய்வு பிரிவில் புதியதாக

1 காவல் கண்காணிப்பாளர், 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 2 துணைக் கண்காணிப்பாளர், 1 மூத்த வழக்கறிஞர், 1 உதவி வழக்கறிஞர், 1 வழக்கறிஞர், 20 இன்ஸ்பெக்டர்கள், 21 சப்-இன்ஸ்பெக்டர்கள், 7 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என ரேணுகா மிஸ்ரா கூறியுள்ளார். இது தவிர 1 சப் இன்ஸ்பெக்டர் (கணக்குகள்), 7 உதவி சப் இன்ஸ்பெக்டர் (கிளார்க்), 4 உதவி சப் இன்ஸ்பெக்டர் (கணக்குகள்), 4 கணினி ஆபரேட்டர்கள், 40 தலைமை காவலர்கள், 49 கான்ஸ்டபிள்கள், 21 கான்ஸ்டபிள்கள் ( டிரைவர்) ஆகியவர்கள் தேவை என்றும் கூறியுள்ளார். இதற்குதான் தற்போது யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+