காவிக்கு மட்டும் அனுமதி.. மற்ற நிறங்களுக்கு தடை.. ஹோலி கொண்டாட யோகி ஆதித்யநாத் புதிய சட்டம்!
லக்னோ: காவி, காவி, காவி இப்போதைக்கு இது மட்டும்தான் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உயிர் மூச்சு. தொடர்ச்சியாக அந்த மாநிலத்தில் காவி தொடர்பான நிறைய சட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்.
அவருக்கு காவி பிடிக்கும் என்பது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் காரணமாகவே இந்த சட்டங்களை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார்.
இனி உத்தர பிரதேசத்தில் நடக்கும் ஹோலி கொண்டாட்டங்களில் காவி நிறம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

அலுவலகம்
முதலில் அரசு அலுவலகம் அனைத்தும் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. இது அந்த அரசால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது. காவல் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பார்க்குகள் என எல்லாமே காவியில் பெயிண்ட் அடிக்கப்பட்டது. டிராபிக் தடுப்புகள், கம்பிகளிலும் பெயிண்ட் அடிக்கப்பட்டது.

ஹோலி கொண்டாட்டம்
இந்த நிலையில் ஹோலி கொண்டாட்டத்தின் போதும் இனி காவி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற நிறத்தில் இருக்கும் பொடிகள் விற்பனைக்கு வருவதே சந்தேகம் தான் என்று கூறப்பட்டுள்ளது. ஹோலி என்பதே வண்ணங்களின் கொண்டாட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சை நிறம்
மிக முக்கியமாக இந்த கொண்டாட்டத்தில் பச்சை நிறம் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தவறி கூட பச்சை நிறத்தை பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பச்சை நிறம் மீதான தடைக்கு காரணம் ஏன் என்று இன்னும் கூறவில்லை.

பின்புலம் இல்லை
இந்த அறிவிப்பிற்கு பின்புலம் எதுவும் இல்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது. காவி மிகவும் அழகான நிறம் என்பதால் இப்படி சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இன்னும் சில தினங்களில் வீடுகளுக்கும் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்க உத்தரவு பறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications