தினமும் 4 என்கவுண்டர் நடந்த யோகியின் கோரக்பூர்.. வெறுப்பரசியலுக்கு முடிவுகட்டிய உ.பி மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வருடத்திற்கு உ.பி.யில் 1038 பேர் என்கவுண்டர்கள்- வீடியோ

  லக்னோ: உத்தர பிரதேச மாநில இடைத்தேர்தலில் தற்போது பாஜக கட்சி மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.

  இதனால் அம்மாநில முதல்வர் யோகி இவ்வளவு நாட்களாக செய்து வந்த வெறுப்பரசியல் மக்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பது கண்கூடாக தெரிந்துள்ளது. மேலும் அவர் அறிமுகப்படுத்தியாய் நிறைய காவி கலர் திட்டங்களுக்கு மக்கள் பெரிய வரவேற்பு கொடுக்கவில்லை.

  மேலும் தற்போது அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்பதால் பாஜகவின் தொடர் வெற்றியில் பெரிய இடி விழுந்து இருக்கிறது.

  எத்தனை என்கவுண்டர் தினமும்

  எத்தனை என்கவுண்டர் தினமும்

  உத்தர பிரதேச அரசு ஆவணங்களின்படி கடந்த ஒரு வருடத்தில் 1,038 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கணக்குப்படி தினமும் 4 பேர் மரணம் அடைகிறார்கள். ஒரு மாதத்திற்கு 120 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். இந்த என்கவுண்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள்.

  கோரக்பூர்

  கோரக்பூர்

  இதில் கோரக்பூரில்தான் அதிகமாக என்கவுண்டர் நடந்து இருக்கிறது. யோகி நீண்ட காலமாக அந்த மக்கள் ஆதரவளித்து வந்தாலும் அங்குதான் அதிகமாக என்கவுண்டர் நடந்து இருக்கிறது. அதற்கு அடுத்து ஷாரான்பூர், ஷாம்லி, முசாபர்நகர் ஆகிய பகுதிகளில் என்கவுண்டர் நடந்துள்ளது.

  இரு பிரிவு

  இரு பிரிவு

  இந்த பகுதியில் அதிகம் கொலை செய்யப்பட்டது இஸ்லாமியர்களும், தலித்துகளும்தான். இந்த கொலையில் 14ல் 13பேர் இஸ்லாமியர்கள் என்பது உறையவைக்கும் உண்மை. இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக தலித்துகள் அதிகமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தேர்தலில் பிரதிபலித்துள்ளது.

  இனி நடக்காது

  இனி நடக்காது

  கோரக்பூரில் இருக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளில் வாக்குகள் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மக்களின் வாக்குகள் பாஜக கட்சிக்கு எதிராக விழுந்து இருக்கிறது. அதனால்தான் தற்போது சமாஜ்வாதி கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. மக்கள் யோகியின் வெறுப்பரசியலை புரிந்து கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Yogi's hate politics trailed him in Gorakhpur and Phulpur Lok Sabha election. BJP faced a huge loss in this by poll.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற