அண்ணி காலை கொழுந்தன் பிடிக்க.. மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர்.. டிக்டாக்கால் வந்த வினை!
மனைவியை கொன்ற கணவன், கொழுந்தன் கைது செய்யப்பட்டனர்
குண்டூர்: கொழுந்தன் அண்ணியின் காலை பிடித்து கொள்ள, மனைவியின் கழுத்தை துண்டால் நெரித்து கொன்றுள்ளார் கணவர்.. டிக்டாக் வீடியோவில் அடிமையானதால், அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கொன்று சுடுகாட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நரசரோ பேட் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சித்தலா சின்ன நரசையா. இவரது மனைவி சுவர்தா.. இவருக்கு 19 வயதாகிறது.

கல்யாணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில், 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுவர்தாவுக்கு டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவது ரொம்ப பிடிக்கும். தினமும் ஏதாவது ஒரு வீடியோவை போட்டு கொண்டே இருப்பார்.. இது நரசையாவுக்கு பிடிக்கவே இல்லை.. அதனால் மனைவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஆனால் வீடியோ பதிவிடுவதை சுவர்தா நிறுத்தவே இல்லை.
இதனால் பொறுமையிழந்த நரசையா தன்னுடைய சகோதரர் சித்தாலா சின்ன வெங்கையாவுடன் சேர்ந்து சுவர்தாவை கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி, வெங்கையா காலை பிடித்து கொள்ளவும்.. நரசையா கழுத்தில் போட்டிருந்த துண்டை கொண்டு சுவர்தாவின் மூச்சை அமுக்கி நிறுத்தியுள்ளார்.. இதில் சுவர்தா பிணமாகிவிட்டார்.. உடனே அவரது உடலை பொட்லுரு சுடுகாட்டில் 2 பேரும் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவர் டிக்டாக் செய்யாதே என்று சொல்லவும், குழந்தையை தூக்கி கொண்டு, சுவர்தா வீட்டைவிட்டே அப்போது வெளியேறி விட்டாராம்.. அங்கிருந்த ஒரு ஹாஸ்டலில் ரூம் போட்டு குழந்தையுடன் தங்கி உள்ளார் சுவர்தா.. அங்கே போயும் டிக் டாக்கில் வீடியோ போடுவதை நிறுத்தவில்லை.. இந்த சமயத்தில்தான், நரசையா சமாதானம் செய்து, போன 14-ம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால், 17-ம் தேதியே சுவர்தாவை அண்ணன் - தம்பி இருவரும் சேர்ந்து கொன்று எரித்து விட்டார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக ஒரு லிட்டர் பெட்ரோலை இவர்கள் வாங்கி கொண்டு செல்லும் சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எரிக்கப்பட்ட இடத்தில் சுவர்தாவின் நகையை வைத்துதான், உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications