கேரளா: இளம் பத்திரிகையாளர் அனுஸ்ரீ பிள்ளை திடீர் மரணம்
கொச்சி: கேரளாவை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் அனுஸ்ரீ பிள்ளை உடல் நலக் கோளாறு காரணமாக இன்று காலை திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவரது மரணம் கேரளாவில் உள்ள செய்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 31 வயதாகும் அனுஸ்ரீ பிள்ளை இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர், பல்வேறு பத்திரிகை நிறுவனங்களில் பணி புரிந்தவர்.
ஜெய்ஹிந்த், இந்தியா விஷன் நிறுவனங்களில் பணியாற்றிய அனுஸ்ரீ கைரளி தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை குழுமத்தின் இணையதள செய்தி பிரிவான சமயம் மலையாளத்தில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.

நேற்றிரவு அனுஸ்ரீக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக பத்தனந்திட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிலைகுலைந்து மயக்க நிலைக்கு வந்த அவரை உயிருக்கு போராடிய நிலையில், கொழஞ்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அனுஸ்ரீயின் உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், அனுஸ்ரீயின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே அனுஸ்ரீ மரணமடைந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் தான் உறுதியான தகவல்களை கூற முடியும் என கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அனுஸ்ரீயின் மரணம் கேரளாவில் உள்ள செய்தியாளர்களையும் ஊடகத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications