Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்டைக்கேறிய சபலம்.. 3 குழந்தையை விட்டுட்டு ஓடிய மனைவி.. துரத்தி துரத்தி தேடிய பரிதாப கணவர்.. ஆனால்?

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: குடும்ப சூழல் காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் பிழைப்பு தேடி வந்துள்ளார் திவாகர்.. ஆனால், வந்த இடத்தில் தன்னுடைய மனைவியை பறிகொடுத்த நிலையில், 3 குழந்தைகளுடன் பரிதாப நிலைமைக்கு இன்று வந்துள்ளார். என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் திவாகர்.. இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் பிந்து.. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பிழைப்பு தேடி தெலுங்கானா மாநிலத்திற்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்கள்.

chhattisgarh telangana

வீட்டு வேலை: சில காலம் திவாகர் பிளம்பராக வேலை பார்த்து வந்தநிலையில், வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்று வாய்ப்பு பிந்துவை தேடி வந்துள்ளது.. அதனால் பிந்துவும் வீட்டு வேலைக்கு போய் சேர்ந்தார்.. ஆனால், வேலைக்கு போன இடத்தில் அங்கீத் சாகேத் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் திவாகருக்கும் தெரியவந்து, அதிர்ச்சி அடைந்தார்.

எனினும், இந்த உறவை தொடர விடக்கூடாது என்று நினைத்த திவாகர், தன்னுடைய வீட்டினை வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டு போனார்.. ஆனால், வீடு மாறினாலும், பிந்துவின் மனம் மாறவேண்டுமே? கடந்த 8-ம் தேதி, அந்த கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டே ஓடிப்போய்விட்டார் பிந்து.

மனைவி மிஸ்ஸிங்: இந்த ஜோடி இருவருமே, ஒரு நண்பரின் வீட்டில் 3 நாட்களாக தங்கியிருந்திருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் மனைவி காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் திவாகர் போலீசில் புகார் கொடுத்தார். எனவே போலீசாரும், அந்த புகாரின்பேரில் மாயமான பிந்துவை தேட ஆரம்பித்தார்கள்..

இதற்கு நடுவில், அங்கித்தின் நண்பர் ஒருவர், கடந்த 11ம் தேதி போனை போட்டு, தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துள்ளார்.. நண்பர் அழைத்ததால், அங்கித்தும், அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.. அங்கே போனால், நண்பருடன் சேர்த்து மேலும் 4 புதிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள்.. ஒருவரையொருவர் அங்கித்துக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுடன், நண்பர்கள் எல்லாரும் மது குடிக்கலாம் என்று சொல்லி உள்ளார்கள்.

கூர்மையான கத்தி: அங்கித்தும் அதற்கு சம்மதிக்க, நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் அங்கித்தை கத்தியால் குத்தியிருக்கிறார்கள்.. அதாவது அனைவருமே சேர்ந்து கூர்மையான கத்தியால், அங்கித் தலையிலேயே சரமாரியாக குத்தியிருக்கிறார்கள். அத்துடன், பெரிய கல்லை எடுத்து, அவரது முகத்தில் போட்டு, நசுக்கியிருக்கிறார்கள்..

இந்த கொடுமையை பிந்து கண்ணால் பார்த்துவிட்டு அலறினார்.. பிறகு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.. பிந்துவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டதையறிந்து அதிர்ச்சியடைந்த 5 நண்பர்களும், பிந்துவை துரத்திக் கொண்டே ஓடினார்கள்.. இறுதியில் பிந்துவை சுற்றிவளைத்து, அவரையும் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

குற்றவாளிகள்: இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது. இதனால் விரைந்து போலீசாரும், தனிப்படை வைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.. இறுதியில் 3 பேரை தனிப்படை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது.. மற்றவர்கள் இன்னமும் தலைமறைவாகவே உள்ளதால், அவர்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.

சம்பவத்தன்று நண்பனை சந்திக்க போன அங்கித்தை காணவில்லை என்று அவருடன் தங்கியிருந்தவர்கள் போலிசில் புகார் அளித்ததன்பேரில்தான், இந்த இரட்டை கொலை வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.

பரிதாபம் கணவர்: அதுமட்டுமல்ல, இப்படியொரு கொடூரம் நடந்தது எதுவுமே தெரியாத பிளம்பர் திவாகர், காணாமல் போன மனைவியை தேடி கொண்டிருந்தாராம். எப்படியாவது பிந்துவை கண்டுபிடித்து, தன்னுடன் அழைத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் அவரால் கண்டுபிடிக்காமல் சோர்ந்துபோன நிலையில்தான், போலீஸில் புகார் தர முன்வந்தாராம். ஆனால், கடைசியில் பிணமாகத்தான் பிந்து அவருக்கு கிடைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+