"செல்லம், ஏமாத்திட்டியே".. மாஸ்டர்மைண்ட் ஸ்வப்னா.. இதுக்காகவே "சீரியல்" பார்த்தாராம்.. உறைந்த போலீஸ்
கணவரை கொன்ற இளம் மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்
கான்பூர்: ஒரு இளம்பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு, உத்தரபிரதேச போலீசார் வாயடைத்து போயுள்ளனர்... என்ன நடந்தது?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாணப்பூர் சிவ்லி பகுதியை சேர்ந்தவர் ரிஷப் திவாரி.. 29 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சப்னா... கடந்த நவம்பர் 27-ம் தேதி, நண்பர் மனீஷுடன் சகர்பூரில் நடைபெற்ற ஒரு கல்யாணத்துக்கு திவாரி சென்றிருந்தார்..
கல்யாணத்தை முடித்துக் கொண்டு, டூவீலரில் வீட்டுக்கு திவாரி திரும்பி வந்து கொண்டிருந்தார்... அப்போது திவாரியை யாரோ ஒரு மர்மநபர் திடீரென தாக்கினார்.. அவர் யாரென்று அடையாளமே தெரியவில்லை..

சரிந்த கணவர்
அந்த கொலைவெறி தாக்குதலில் திவாரி ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தார்.. பிறகு, அங்கிருந்த பொதுமக்கள் திவாரியை மீட்டு, ஸ்வரூப் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. ஆபத்தான நிலையில் இருந்தாலும், தீவிரமான சிகிச்சை தரப்பட்டதையடுத்து, உயிர்பிழைத்தார்.. கடந்த டிசம்பர் 1-ம் தேதி திவாரி வீட்டுக்கு வந்துவிட்டார்.. பிறகு, 2வது நாளே, அதாவது டிசம்பர் 3-ம் தேதி மறுபடியும் திவாரிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

விஷப்பால்
ஆனால், இந்த முறை அவரை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதையடுத்து, அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரும் திவாரி இறந்தது குறித்து விசாரணையை துவங்கினர்.. அந்த விசாரணையில் வெளியான தகவலை கேட்டு, அதிர்ந்தும் போய்விட்டனர்.. திவாரி தாக்கப்பட்ட அதே நாளில், அதே இடத்தில், செல்போன் நம்பர்களை ஆராய்ந்தனர்.. அப்போது, சந்தேகத்திற்கு இடமான செல்போன் பேச்சுக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்... தாக்குதல் நடத்தப்பட்ட அந்த இடத்தில் இருந்து, ராஜூ குப்தா என்பவர் நிறைய போன்களை செய்துள்ளார் என்பது தெரியவந்தது..

கள்ள ஜோடி
அந்த போன்களை அவர் யாருக்கு செய்துள்ளார் என்று அடுத்த விசாரணையை துவக்கினர்.. எல்லா போன்கால்களும், திவாரி மனைவி சப்னாவுக்கு வந்துள்ளதை கண்டுபிடித்தனர். பிறகு சப்னாவுக்கு வந்த போன்கால்களை போலீசார் ஆய்வு செய்தபோது, ராஜூவுக்கும் சப்னாவுக்கும் இடையேயோன கள்ளக்காதல் அம்பலமானது.. இறந்துபோன திவாரி மிகப்பெரிய பணக்காரராம்.. நிறைய சொத்துக்களை வைத்திருக்கிறார்.. இந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்பதற்காகவே கள்ளஜோடி திட்டமிட்டிருக்கிறார்கள்.. கணவனை கொல்வதை தவிர வேறு வழியில்லை என்று சப்னா முடிவு செய்துள்ளார்..

பாலில் விஷம்
கடந்த சில மாதங்களாகவே, பாலில் ஏதேதோ மருந்துகளையும் கலந்து தந்து வந்துள்ளார் சப்னா.. அதில் எதுவும் பலனளிக்காத காரணத்தினால்தான், கூலிப்படையை தயார் செய்தார் சப்னா. இதற்காக நியமிக்கப்பட்டவர்தான் சிட்டு.. நவம்பர் 27-ம் தேதி, திவாரி மீது தாக்குதல் நடத்தியது சிட்டுதான்.. ஆனால், திவாரி அதில் இருந்து தப்பிவிட்டார்.. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த கணவரை பார்த்ததுமே அதிர்ந்து போனாராம் சப்னா.. அதனால், அவரை கொலை செய்ய அடுத்த பிளானை கையில் எடுத்துள்ளார்..

மெடிக்கல் ஷாப்
மெடிக்கல் ஷாப்புக்கு சென்று நிறைய தூக்க மாத்திரைகளை வாங்கி வந்துள்ளார்.. திவாரி சிகிச்சையில் இருந்து வந்துள்ளதால், பேஷன்ட் என்பதை சொல்லி, தூக்க மாத்திரைகளை கேட்டு வாங்கி உள்ளார்.. அந்த மாத்திரைகளை பாலில் கலந்து திவாரிக்கு தந்துள்ளார் சப்னா.. ஒருவேளை இந்த முயற்சியிலும் தோல்வி அடைந்தால், வேறு ஒரு ஐடியாவையும் யோசித்து வைத்திருந்தாராம்.. அதுமட்டுமல்ல,எப்படி கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே, நிறைய கிரைம் சீரியல்களை பார்த்து வந்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

செல்லம் ஏமாத்திட்டியே
இப்போதைக்கு சப்னா, ராஜூ, சிட்டு 3 பேரும் ஜெயிலில் இருக்கிறார்கள்.. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஒரு கொடுமை என்றால், இறந்துபோன திவாரிக்கு மனைவிமீது பிரியம் அதிகமாம்.. ஒவ்வொரு முறையும் உயிர்பிழைத்தபோதெல்லாம்கூட, மனைவி மீது அவருக்கு கடைசிவரை சந்தேகமே வரவில்லையாம்.. அதனால்தான், அவர்தான் தன்னை கொன்றார் என்பதே தெரியாமல் போய் சேர்ந்துவிட்டார்.

முடிஞ்சது வேலை
இந்த விசாரணையில் இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. திவாரியை கொலை செய்ய சிட்டு என்பவரை சப்னா ஏற்பாடு செய்த நிலையில், அன்றைய தினமே கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டது.. திவாரி ரத்த வெள்ளத்தில் சுருண்டுரோட்டில் விழுந்ததுமே, 'வேலை முடிந்தது என்று சப்னாவுக்கு மெசேஜ் அனப்பினாராம் ராஜூ. இந்த மெசேஜ்தான் போலீசாருக்கு, விசாரணையில் உறுதுணையாகவும், சப்னாவிடமும் விசாரணை நடத்த முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. "ஓவர் டோஸ்" மருந்துகளை நிறைய கொடுக்கப்பட்டாலேயே தீவாரி உயிர் பிரிந்ததாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துள்ளதாம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications