இளம்பெண்ணை சீண்டிய வாலிபருக்கு ஊர் மக்கள் கொடுத்த உவ்வே தண்டனை! தப்பு செய்ய இனி மனசு வராதுல்ல

Posted By:
Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கிய கிராம மக்கள் அவரை மனிதக் கழிவையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவபுரி மாவட்டத்தில் உள்ள வினேகா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.

Youth attacked by crew of the people for sexual harassment

மேலும் அவரை மனிதக் கழிவையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தனர். இத்துடன் இந்த சம்பவத்தை அந்த குடும்பத்தினர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அந்த இளம்பெண்ணும், தானும் காதலித்து வந்ததாகவும், இது பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண்தான் தம்மை தோட்டத்திற்கு அழைத்ததாகவும், அப்போது பெண்ணின் சகோதரன் இருவரையும் பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

Gurgram Women thrashes | Mallya was Booed by Indian fans-Oneindia Tamil

இந்தச் சம்பவமானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A youth in Madhya Pradesh's Shivpuri district was allegedly forced to eat shit and also beaten up by a girl's family. The girl's family accused the youth of harassing her.
Please Wait while comments are loading...