ஆம்புலன்ஸ் தர மறுப்பு.. இறந்த தந்தையின் உடலை கை வண்டியில் எடுத்து சென்றார் மகன்
பிலிப்பித்: உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த தந்தையை, இளைஞர் ஒருவர் கை வண்டியில் எடுத்துச் சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் நகர் மதினாஷா பகுதியைச் சேர்ந்த தொழிலாளி துளசிராம் (70). அவருக்கு நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகன் சுராஜ் தனது தந்தையை துளசிராமை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு அழைத்துச் சென்றார்.

நீண்ட காத்திருப்புக்குப்பின் அவர் 9.40 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் காலை 11 மணியளவில் துளசிராம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தந்தையின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டார் சுராஜ். எந்த வாகனமும் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். பலமுறை சுராஜ் கேட்டும் மருத்துவமனை சார்பில் ஆம்புலன் தர மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி கைவண்டியில் தந்தையின் உடலை வைத்துச் இழுத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சி நேற்று டி.வி மற்றும் சமூக வலை தளங்களில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த மனைவியின் உடலை கணவர் ஒருவர் தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் ஒடிசாவில் சமீபத்தில் நடந்தது. இந்த வீடியோ காட்சி டிவி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications