சோனியா காந்திக்காக திருப்பதி கோயிலில் கைவிரலை காணிக்கையாக்கிய காங். தொண்டர்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்காக கைவிரலை துண்டித்து திருப்பதி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் தொண்டர் ஒருவர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கைது செய்யப்படாமல் இருந்தால், திருப்பதி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக கர்நாடக மாநிலம், மண்டியாவைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் வேண்டியிருந்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு, நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தனது வேண்டுதல் நிறைவேறியதால் கைவிரலை துண்டித்து, கோவிலில் காணிக்கை செலுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications