சாக்லேட் கொடுப்பதாக ஏமாற்றி 9 வயது சிறுமியை சீரழித்து அலமாரியில் வைத்து பூட்டிய வாலிபர்
ஹைதராபாத்: ஆந்திராவில் 26 வயது வாலிபர் ஒருவர் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தனது அறையில் உள்ள அலமாரியில் வைத்து பூட்டிவிட்டார்.
ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள குத்புல்லாபூரைச் சேர்ந்தவர் பப்லு(26). மெக்கானிக். அவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் சாக்லேட் கொடுப்பதாகக் கூறி நேற்று மாலை அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை அலமாரியில் வைத்துவிட்டு அறைக் கதவை பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்நிலையில் சிறுமியை காணாமல் அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடினர். அவர்களுக்கு பப்லு மீது சந்தேகம் வந்து அவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்றபோது கதவு பூட்டியிருந்தது. உடனே அவர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று தேடியபோது சிறுமி அலமாரியில் வைத்து பூட்டப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியின் பாட்டி போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பப்லுவை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications