ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி எம்பிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அடுத்தகட்டமாக ராஜினாமா முடிவை அறிவித்துள்ளது.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அந்த மாநில அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் 2வது கூட்டத்தொடர் முழுவதையும் எம்பிகள் முடக்கியும் வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்று சபாநாயகர் முடிவை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அடுத்தகட்ட நடவடிக்கையாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கடைசி நாள் கூட்டத்தில் எம்பிகள் ராஜினாமா கடிதத்தை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 9 எம்பிகளும், மாநிலங்களவையில் 1 எம்பியும் உள்ளனர். தங்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிகளும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications