மோடியை விடுவித்த தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் வி்ட்டு அழுத ஜாகியா
அகமதாபாத்: குல்பர்க் சொசைட்டி மத வெறியாட்ட வழக்கிலிருந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விடுவித்து அகமதாபாத் பெருநகர கோர்ட் பிறப்பித்த தீர்ப்பைக் கேட்டதும், இந்த வழக்கில் நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் 74 வயதான ஜாகியா ஜாப்ரி கண்ணீர் விட்டு அழுதார்.
இவர் குல்பர்க் சொசைட்டி கலவரத்தின்போது உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஆவார். குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புபுலனாய்வுக் குழு கூறியதை எதிர்த்து அப்பீல் செய்து போராடி வந்தவர் ஜாகியா.

குல்பர்க் கலவரத்தில் ஜாகியாவின் கணவர் உள்பட மொத்தம் 68 பேர் இந்து மத வெறியர்களால் உயிரோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர்.
நேற்று தனது அப்பீல் மனுவை அகமதாபாத் கோர்ட் நிராகரித்து உத்தரவிட்டதைக்கேட்டு கதறி அழுது விட்டார்ஜாகியா.
அதேசமயம், இந்தத் தீர்ப்புகுறித்து நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் சத்யமேவ ஜெயதே அதாவது வாய்மையே வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக ஜாகியா தெரிவித்துள்ளார். கண்ணீருடன் காணப்பட்ட அவர் கூறுகையில், நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்றார்.
ஜாகியாவின் மகன் தன்வீர் ஜாப்ரி கூறுகையில், இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. எங்கள் முன்பு நீண்டதொரு சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்று உணர்கிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications