ஜீ நியூஸ் எக்ஸிட் போல்: கோவாவில் பாஜக- காங் இடையே நெக் டூ நெக் போட்டி.. தொங்கு சட்டசபை?
கோவா: கோவாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நெக் டூ நெக் போட்டி இருக்கும் என்றும் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் ஜீ நியூஸ் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது. இந்த மாநில சட்டசபையின் பெரும்பான்மை பலம் 21 ஆகும்.
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உள்ளூர் கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.

மனோகர் பாரிக்கர்
மனோகர் பாரிக்கர் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கோவா சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

40 சட்டசபை தொகுதிகள்
மொத்தம் 40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த கோவாவில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடியது. இந்த நிலையில் பல நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது.

ஜீ நியூஸ் எக்ஸிட்
அதில் ஜீ நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக 13-18 இடங்களிலும் காங்கிரஸ் 14-19 இடங்களிலும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 2-5 இடங்களிலும் ஆம் ஆத்மி 1-3 இடங்களிலும் இதர கட்சிகள் 1-3 இடங்களிலும் வெல்லும் என கணித்துள்ளது. கோவாவில் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவுவது போல் தெரிகிறது.

தொங்கு சட்டசபை?
மேலும் கோவாவில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டு தொங்கு சட்டசபை ஏற்படுவது போல் தெரிகிறது. இந்த மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸும் கோலோச்ச முயற்சித்தது. ஆனால் அது கட்சிக்கு கோவாவில் ஆதரவு இல்லாத நிலையே தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications