மிசோரத்தில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி.. ஆட்சியை பிடித்த எதிர்க்கட்சி! புதிய முதல்வர் யார் தெரியுமா
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், இதில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி கிடைத்துள்ளது. அங்கே எதிர்க்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வென்றது.

மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் மிசோரம் மாநிலத்தில் இழுபறி இருப்பது போன்ற நிலை காணப்பட்டது. ஆனால், அதன் பிறகு டிரெண்ட் மொத்தமாக மாறியது.
மிசோரம்: அங்கே மிசோரத்தில் ஆளும் கட்சியாக இருந்த மிசோ தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு வெறும் 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
அதேநேரம் அங்கே எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கத்திற்கு அங்கே ஆதரவு வேற லெவலில் இருக்கிறது. அங்கே மொத்தம் 40 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்ட நிலையில் அதில் 27 இடங்களை ஜோரம் மக்கள் இயக்கத்திற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் மிசோரம் மாநிலத்தில் முதல்முறையாக ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் அதிர்ச்சி: இதில் காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் மிசோரத்தில் கடந்த 2018 வரை காங்கிரஸ் தான் ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர்களால் ஒரே ஒரு இடத்தை தான் கைப்பற்ற முடிந்துள்ளது. மிசோரத்தில் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்காத பாஜக கூட அங்கே இரண்டு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் மிசோரத்தில் காங்கிரஸ் முழுமையாகத் தனது இருப்பை இழந்துவிட்டது.
புதிய முதல்வர்: மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வென்று முதல்முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது. மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி லால்துஹோமா பதவியேற்க உள்ளார். 73 வயதான இவர், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிட்ட 2,982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாகக் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருந்த நிலையில், அதை மாற்றி ஜோரம் மக்கள் இயக்கம் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications