For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பிக்கை அளிக்கும் தகவல்.. கொரோனா பாதிப்பில் இருந்து 10 லட்சம் பேர் குணமடைந்தனர்

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 32,18,183 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணம் அடைந்துள்ளனர்.அதாவது 1,000,032 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 32,18,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இன்று காலை நிலவரப்படி 228,026 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

1,000,032 peoples Recovered from COVID-19 In all over world till now

அதேநேரம் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் படுவேகமாக அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1,000,032 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். அதாவது மொத்த பாதிப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணம் அடைந்துள்ளனர்.

உயிரிழப்பு அளவு என்பது மொத்த பாதிப்பில் சுமார் 6 சதவீதம் அளவில் தான் உள்ளது. அதேநேரம் 1,990,125 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 1,930,308 (97%) பேர் ஓரளவு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 59,817 (3%) பேர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

27 வயதுதான்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை.. திடீர் பலி.. சென்னையை உலுக்கிய ஒரு மரணம்! 27 வயதுதான்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை.. திடீர் பலி.. சென்னையை உலுக்கிய ஒரு மரணம்!

உலகிலேயே மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2390 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61,656 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 765 பேர் கொரோனாவால் பலியாகினார். இதனால் அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26,097 ஆக உயர்ந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 453 பேர் , இத்தாலியில் 323 பேர் , பிரான்ஸ் நாட்டில் 427 பேர் , பிரேசிலில் 448 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    மெல்ல மெல்ல மீண்டு வரும் நியூயார்க்

    English summary
    1,000,032 peoples Recovered from COVID-19 In all over world till now, tottaly 3,218,183 people affected COVID-19
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X