தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகள் நீக்கம்.. டுவிட்டர் நிறுவனம் தகவல்
சான் பிரான்சிஸ்கோ: தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகளை 6 மாதங்களில் நீக்கியிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
இதில் பெரும்பாலான கணக்குகள் ஆரம்ப நிலையிலேயே, அதாவது முதல் ட்விட்டை பதிவு செய்வதற்கு முன்பே நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 86 நாடுகளின் அரசுகளிடமிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில், 1,66 ,513 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் கொள்கை மற்றும் சட்ட பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா கட்டே, 2018 ம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட கணக்குகளை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
அதிகபட்சமாக அமெரிக்கா தீவிரவாதம் மற்றும் அதனை ஊக்குவிக்கும் டுவிட்டர் கணக்குகள் பற்றி கேட்டு 30% கோரிக்கைகள் அனுப்பியதாக தகவல்தெரிவித்தார். ஜப்பான் 24%, ஐரோப்பா 13%, இந்தியா 6%, ஜெர்மனி 6%, பிரான்ஸ் 5% இது மாதிரியான கோரிக்கைகளை தங்கள் நிறுவனத்திற்கு அனுப்பியிருந்ததாக விஜயா கட்டே கூறினார்.
மேலும் சில சர்வதேச சட்ட அமைப்புக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வாசகங்களை நீக்கும்படி 8% கோரிக்கைகளை அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications