தொடர் குண்டுமழை.. காசாவை கதறவிடும் இஸ்ரேல்.. உயிரை காக்க வீடுகளை விட்டு ஓடிய 1.83 லட்சம் பேர்! ஷாக்
இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் உயிருக்கு பயந்து காசாவில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடைந்து வருகின்றன. இந்நிலையில் 2 நாளில் எவ்வளவு மக்கள் காசாவில் வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தம் என்பது விஸ்வரூபமாகி உள்ளது. பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த சனிக்கிழமை 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தினர்.

அதோடு இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதையடுத்து போர் தொடங்கி உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் மீது அந்த நாட்டு ராணுவத்தினர் தாக்குதலை தொடங்கினர்.
இதுமட்டுமின்றி இஸ்ரேல் விமானப்படை காசா பகுதிக்குள் நுழைந்து வான்வெளி தாக்குதலை தொடங்கியது. வானில் இருந்து குண்டுகளை காசா மீது வீசப்பட்டு வருகிறது. இதனால் காசா பகுதி அழிவை சந்தித்து வருகிறது. மேலும் ஹமாஸ் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில் அதனை நாங்கள் முடித்து வைப்போம். எங்களின் தாக்குதல் இன்னும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
இதனால் காசாவில் உள்ள மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். மேலும் மக்கள் வெளியேற 24 மணிநேரம் காலஅவகாசம் வழங்கினார். இந்நிலையில் தான் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து காசாவில் வசிக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி வரும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதில் 1.80 லட்சம் மக்கள் உயிருக்கு பயந்து 2 நாட்களில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்கள். இவர்களில் 1.37 லட்சம் பேர் ஐநா நடத்தும் 83 பள்ளி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த பள்ளிகளில் பதுங்குகுழிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனால் அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் 1.37 லட்சம் பேர் 83 பள்ளிகளில் இருப்பது என்பது கடும் இடநெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள் தற்போது மக்கள் நிரம்பி வழிவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் தற்போது காசாவில் உள்ள 200 நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. வரும் நாட்களில் இன்னும் யுத்தம் தீவிரமாகும் என கூறப்படுவதால் கூடுதல் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறலாம் என கூறப்படுகிறது. இதனால் காசாவில் இன்னும் இடநெருக்கடி அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதுபற்றி பாலஸ்தீன அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் ஐநாவின் நிவாரணம் மற்றுமு் வேலை முகமையின் செய்தி தொடர்பாளர் அட்னான் அபு ஹஸ்னா கூறுகையில், ‛‛காசா பகுதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் தான் முக்கிய காரணமாகும். தற்போது அவர்கள் ஐநா சபையுடன் இணக்கமாக உள்ள பள்ளிகளை பாதுகாப்பான இடம்கருதி அங்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இங்கு மருத்துவம், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications