சீனா பட்டாசு ஆலையில் பயங்கர தீ; 10 பேர் பலி: 7 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பீய்ஜிங்: சீனாவில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன நாட்டின் ஹீணன் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
முதல்கட்ட தகவல்படி 5 பேர் உயிரிழந்ததாகவும், சட்டவிரோதமான வெடிபொருட்களை தயாரிக்கும் ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications