துபாய் சாலை விபத்தில் பீகாரைச் சேர்ந்த 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலி
துபாய்: துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர். பலியான இந்தியர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்யும் 27 வெல்டிங் பணி செய்யும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

எப்போதும் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் எமிரேட்ஸ் சாலையில் பேருந்து வேமாக சென்றது. அப்போது அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியது. பேருந்து மோதியதும் வழுக்கி 5 மீட்டர் தொலைவிற்கு சென்றது.
இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். உடனடியாக மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
விபத்தில் பலியானவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்த இந்திய மற்றும் வங்காளதேச தொழிலாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுதான் இந்த ஆண்டின் மிக பெரிய விபத்து என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications