ஈராக்: மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி!
பாக்தாத்: ஈராக் நாட்டில் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 11 பிறந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக் நாட்டில் மேற்கு பாக்தாத்தில் உள்ள யார்மோக் மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் இருந்த 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குழந்தைகள் அனைத்தும் முன் கூட்டியே பிறந்த குழந்தைகள் என கூறப்படுகிறது. மேலும், தீ விபத்தில் சிக்கியிருந்த 7 குழந்தைகள் மற்றும் 29 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஈராக் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அல்-ருத்தானி தெரிவித்துள்ளதாவது: நேற்றிரவு யார்மோக் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்பட்டது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
ஈராக் நாட்டில் மின்கசிவினால் விபத்து ஏற்படுவது சகஜமானதுதானாம். அந்நாட்டில் உரிய பாதுகாப்பு இல்லாத மோசமான வயரிங் செய்யப்படுவதால் தான் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications