குலுங்கிய நேபாளம்.. தரைமட்டமான கட்டிடங்கள்.. மண்ணோடு புதைந்த மக்கள்.. 132 பேர் பலியான சோகம்
காத்மாண்டு: நேபாளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்திருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனையடுத்து நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சில குலுங்கி சரிந்துள்ளன. அதேபோல இரவு 11 மணிக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று காலை 5 மணி நிலவரப்படி சுமார் 70 பேர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தின் மேற்கு ருக்கும் பகுதியில் 36 பேரும், ஜாஜர்கோட் பகுதியில் 92 பேரும் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்திருக்கிறார். நேபாளத்தின் நிலப்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் நில தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதேபோல வட இந்தியாவின் டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications