பாகிஸ்தான் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. 13 பேர் பலி.. 50 பேர் படுகாயம்!
பெஷாவர் : பாகிஸ்தானில் ஒரு காவல் நிலையத்தில் நேற்று திடீரென அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்ததில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்புக் காரணம், வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட விபத்து என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறுவதற்கு மத்தியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், பலர் உள்நாட்டு தலிபான் கிளைகள் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

ஆனால், காவல் நிலையத்தில் வெடி மருந்து இருப்பு அறை இருந்ததாகவும், அங்கு சேமிக்கப்பட்டிருந்த பழைய வெடி பொருட்களே அது இந்த வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மாகாண காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்புத்துறை பணியில் உள்ள அதிகாரிகள் என்று ஹயாத் கூறியுள்ளார். அத கட்டிடத்தின் வழியாக சென்ற ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் கொல்லப்பட்டதாகவும் ஹயாத் கூறியுள்ளார்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications