ஹலோ போலீஸ்.. சீக்கிரம் வாங்க.. என் குடும்பத்தில் 5 பேரை கொன்னுட்டேன்.. ஷாக் தந்த 14 வயது சிறுவன்

குடும்பத்தில் உள்ள 5 பேரை 14 வயது சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குடும்பத்தில் 5 பேரை கொன்னுட்டேன்.. ஷாக் தந்த 14 வயது சிறுவன்- வீடியோ

    அலபாமா: "என் குடும்பத்தில் உள்ள 5 பேரையும் நான் சுட்டு கொன்னுட்டேன்" என்று 14 வயது சிறுவன் போலீசுக்கு போன் போட்டு சொன்ன பயங்கரம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் சிறுவர்கள் கூட துப்பாக்கியை வைத்துக் கொண்டு திரிவதும், அதன் மூலம் வன்முறைகள் அதிகரிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    14 year old boy killed 5 family members in Alabama

    இப்படிதுப்பாக்கி கலாச்சாரத்திற்கு வருஷத்துக்கு சுமார் 36,000 பேர் கொல்லப்படுவதாக புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன. இப்போதும்கூட அப்படி ஒரு நிலைகுலைய வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

    அலபாமா மாகாணத்தில், எல்க்மொண்டி என்ற இடத்தில் வசித்து வந்த குடும்பத்தினரை 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான். திங்கட்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சிறுவன் 5 பேரை துப்பாக்கியால் சுட்டதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்து உள்ளனர். படுகாயமடைந்த 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தும் பலனின்றி உயிரிழந்தனர். இதில் சிறுவனின் 6 மாத தம்பியும் அடக்கம்.

    இதுகுறித்து போலீசாருக்கும் அந்த சிறுவனே போன் செய்து, 5 பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், துப்பாக்கியை தூக்கி தூர போட்டு விட்டதாகவும் சொல்லி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான். இதை அலபாமா அரசு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

    இவனிடம் இப்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பையன் யார், என்ன என்ற காரணத்தை போலீசார் சொல்லவிலை. அதனால் கொலைக்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை. ஆனால் வீசி எறிந்த துப்பாக்கியை தேடும் பணியில் சிறுவனும் ஈடுபட்டு வருகிறானாம்.

    9மிமீ கைத்துப்பாக்கியை இந்த சிறுவன் பயன்படுத்தியுள்ளான், ஆனால் எங்கிருந்து இந்த துப்பாக்கியை வாங்கினான் என்பதும் விசாரணையில் உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+