அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பிஞ்சு குழந்தைகள் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 ஆசிரியர்களையும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தார்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு கலாசாரம் என்பது நீண்டகாலமாக தொடரும் பிரச்சனையாக உள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 52% அதிகரித்துள்ளன. கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications