17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு!
டெஹ்ரான்: 17 சிஐஏ உளவாளிகளை பிடித்துவிட்டதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஈரான் அமெரிக்கா இடையிலான பிரச்சனை மற்றும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் நேற்று முதல் நாள் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த பின் இந்த பிரச்சனை இன்னும் அதிகம் ஆனது.
இந்த எண்ணெய் கப்பலில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் ஈரான் சிறைபிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன செய்தி
இந்த நிலையில்தான் 17 சிஐஏ உளவாளிகளை பிடித்துவிட்டதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரானில் செயல்பட்டு வந்த இந்த அமெரிக்க உளவாளிகளை சில நாட்களுக்கு முன் ஈரான் ராணுவத்தினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஒரு குழுவாக செயல்பட்டு வந்த இவர்களை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

என்ன சிலர்
இதில் சிலருக்கு தூக்கு தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும் கொடுக்க போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. முக்கிய தகவல்களை திருடி வெளியிட்ட அமெரிக்க உளவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. மொத்தம் 8 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன காரணம்
இவர்கள் எல்லோரும் ஈரானின் எண்ணெய் கிணறுகள் குறித்த தகவல்கள், அணு ஆயுத உற்பத்தி குறித்த தகவல்கள், அரசு திட்டங்கள் குறித்த தகவல்களை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இவர்கள் ஈரானில் செயல்பட்டு வந்தனர் என்று கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான ஆவணங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

என்ன கோபம்
ஈரானின் இந்த அறிவிப்பு அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். இந்த நிலையில் ஈரானின் இந்த செயல் அமெரிக்காவை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications