சவுதியில் நடந்த ஐ.எஸ்.எப். நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
அல்கோபார்: இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) கிழக்கு மாகாண நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 15.11.14 அன்று இரவு 8.30 மணிக்கு அல்கோபார் ரஃபா மெடிக்கல் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. தேசிய தலைவர் கர்நாடகாவை சேர்ந்த வசீம் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் சயீத் சாஹிப் தமது உரையின் போது தலைநகர் டெல்லியிலேயே குழந்தைகள் தங்களின் கடும் பசியால் கோழியின் கழிவுகளான அதன் கால்களை பச்சையாக உண்ணும் கொடுமையை டெல்லி எஸ்.டி.பி.ஐ. அலுவலகம் செல்லும் போது காண முடிகிறது.

இத்தகைய அவல நிலைகளுக்கு தீர்வு காணாமல் தூய்மை இந்தியா என்ற மோடியின் திட்டத்தால் பாமர மக்களுக்கு பயனேதும் இல்லை என்றார்.
எஸ்.டி.பி.ஐ.யின் பசியிலிருந்தும் விடுதலை, பயத்திலிருந்தும் விடுதலை என்னும் சுலோகம் எப்போது ஆட்சி அதிகாரத்தின் மூலம் உயிரோட்டம் பெறுகிறதோ அன்று தான் நமது தேசம் வல்லரசாகவும், நல்லரசாகவும் திகழ முடியும் என்றார்.
ஐஎஸ்எப் கிழக்கு மாகாண தேசிய பொதுச் செயலாளர் நசீர் சாஹிப் நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கூட்டத்தில் ஐஎஸ்எப் கிழக்கு மாகாண தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி, தமிழ் மாநில துணைத் தலைவர் மக்தூம் நைனா, பொதுச் செயலாளர் திப்பு சுல்தான், கேரள மாநில தலைவர் பாரூக் முகம்மது, கர்நாடகா மாநில தலைவர் முகம்மது சரீப் மற்றும் அல்ஜுபைல், அல்ஹஸ்ஸா, சிஹாத், கோபார், தம்மாம், குத்ரியா உள்ளிட்ட கிளைகளின் உயர்மட்ட நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சவுதி வாழ் காயல்பட்டினம் பொதுமக்களின் சார்பில் தேசிய தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் டி.சி.டபுள்யூ கெமிக்கல் ஆலை வெளியேற்றும் கழிவுகளால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறுமுகநேரி, பேயன்விளை மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் மக்கள் புற்றுநோய் உட்பட கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியிலுள்ள மீன்வளம், உப்பள தொழில் முற்றிலும் நசிந்து வருகிறது.

இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஆலை நிர்வாகம் மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளது. நிபுணர் குழுவை கொண்டு ஆலையின் கழிவு வெளியேற்றும் தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உள்ளூர் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை வைத்தது. ஆனாலும் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
ஆகவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர எஸ்.டி.பி.ஐ. தேசிய அளவில் குரல் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று கேட்டு கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications