சென்னைக்காரர் பலி.. அந்தரத்தில் மோதிய 2 ஹெலிகாப்டர்கள்.. ஒரு நொடியில் நொறுங்கிய ஷாக் வீடியோ
காத்மாண்ட்: அண்டை நாடான நேபாளத்தில் சுற்றுலா ஹெலிகாப்டர்கள் ஒரே இடத்தில் தரையிறங்க போட்டி போட்டு வந்தபோது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஹெலிகாப்டர்களுக்கும் கண்இமைக்கும் நொடியில் நொறுங்கிய நிலையில் சென்னையை சேர்ந்தவர் பலியானார். இன்னொரு பயணி, 2 பைலட்டுகளும் படுகாயமடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

அண்டை நாடான நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் தான் இந்த கோர விபத்து நடந்தது. இங்குள்ள கும்பு பசாங் லாம்பு ரூரல் முனிசிபாலிட்டி 4வது வார்டில் இன்று காலையில் 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்காக வந்தன.
அப்போது திடீரென்று இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றொடொன்ஸ் மோதிக்கொண்டன. முதற்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் 'பிஸ் டெயில் ஏர்' மற்றும் 'டைனஸ்டி ஏர்' ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இதில் சென்னையை சேர்ந்த வசந்த் குமார் பலராமராமாடு என்பவர் பலியாகி உள்ளார். அவருக்கு வயது 47. இவர் பிஸ்டெயில் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் பயணித்தவர்.
அதேபோல் ஹெலிகாப்டரில் பயணித்த சைலேஷ் கிருஷ்ணா என்பவர் படுகாயமடைந்துள்ளார். இவர் இந்தியாவை பூர்வீமாக கொண்டவர் என்றாலும் நியூசிலாந்து குடியுரிமையை பெற்றவர். இவர் தவிர ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டுகளும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு ஹெலிகாப்டரில் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த வசந்த் குமார் பலராமராமாடுவின் உடல், லுக்லா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இரு ஹெலிகாப்டர்களுக்கும் தரையிறங்க வந்தபோது அந்தரத்தில் நேருக்கு நேர் மோதி நொறுங்கி கீழே விழுந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
Two helicopters collided during landing at Pheriche helipad in Solukhumbu district https://t.co/9LCU137y5H
— Surajit (@surajit_ghosh2) November 3, 2026
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் 2 ஹெலிகாப்டர்களும் மோதி நொறுங்கும்போது அதன் அருகே இருந்தவர்கள் அச்சத்தில் சம்பவ இடத்தில் இருந்து ஓடிச்செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
