மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! வெளியானது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த 9- 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI - Top Class Education in schools for OBC, EBC & DNT Students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Scholarship Government Scholarship OBC EBC

2026-2027-ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top class School) சிறந்து செயல்படும் கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9-10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11-12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாணாக்கர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2026. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் 15.12.2026. மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். வருமான வரம்பு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-2026 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://schoarships.gov.in) தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & password பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி, OTR Number-ஐ பயன்படுத்தி 2026-27-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தலைமையாசிரியர்கள், தொடர்புடைய முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்களை தொடர்பு கொண்டு பெறலாம். மேலும், https://www.bcmbcmw.tn.gov.in/welschemes.htm என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அறிந்து கொள்ளலாம். எனவே, தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+