ஆயுதமான சாப்பாடு தட்டு.. கைதி எடுத்த விபரீத முடிவு.. நாகை சிறையில் ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவர், அறை மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் சாப்பாட்டு தட்டால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக வெளிப்பாளையம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றக் காவலில் நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Nagapattinam Jail Prisoner

உயிரை மாய்க்க முயற்சி

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேல், வழக்கமாக தங்கியிருந்த அறையிலிருந்து வேறொரு அறைக்கு நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் உணவு உட்கொண்ட பிறகு, திடீரென தான் சாப்பிட்ட அலுமினியத் தட்டை உடைத்துக் கூர்மையாக்கி, எதிர்பாராத விதமாகத் தனது கழுத்துப் பகுதியில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீவிர சிகிச்சை

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்கள், உடனடியாக அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, நாகை அருகே ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறை வளாகத்திற்குள்ளேயே கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் சக கைதிகள் மற்றும் சிறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+