விஜய்யின் சொந்த தொகுதி மக்களுக்கே இந்த நிலையா?.. திருச்சி விமான நிலையத்தை அதிர வைத்த போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாக போகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மக்கள் போராடுவதற்கு முன்பே அவர்களின் தேவையை அரசு நிறைவேற்றும் என்று விஜய் கூறினார். ஆனால் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களின் போராட்டத்திற்கு கூட விஜய் மதிப்பளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதிக்குப்பட்ட செம்பட்டு மக்கள், தங்கள் வாழ்வாதார பிரச்சனைக்காக நேற்று திருச்சி விமான நிலையத்தில் விஜயை சந்திக்க காத்திருந்தனர். அவர்களை விஜய் சந்திக்காமல் சென்றுவிட்டார்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் ஏராளமான மக்கள் உள்ளனர். அந்த பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அருகிலேயே குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் அந்த இடங்களை ஒருவர் விலைக்கு வாங்கியதாக கூறி, அந்த மக்களை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Vijay TVK Trichy

இடத்தை காலி செய்ய முயற்சி

தனியார் கல்லூரிக்காக, அரசு அதிகாரிகள் கிராமத்தையே காலி செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 10 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கறார் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை செல்வதற்காக நேற்று திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க ஏராளமான தவெகவினர், விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் செம்பட்டு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்களும் விஜயை சந்தித்து தங்கள் பிரச்சனையை முறையிட நின்றார்கள்.

ஐயா தமிழக முதலமைச்சரே.. எங்களை காப்பாற்றுங்க என்று பதாகையை ஏந்தி வெயிலில் கால் கடுக்க நின்றார்கள். அதிகாரிகள் அவர்களை விடவே இல்லை. விஜயின் காரை மறித்தும் பார்த்தனர். மனுவை மட்டும் வாங்கி கொண்டு விஜய் அவர்களை சந்திக்காமலேயே சென்றுவிட்டனர். இதனால் மக்கள் அதிருப்தியடைந்தனர். செம்பட்டு திருச்சி கிழக்கு தொகுதி எல்லையில் உள்ளது. கடந்த தேர்தலில் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.

விஜயை சந்திக்க காத்திருப்பு

பெரம்பூர் தொதியிலும் வெற்றி பெற்றதால், திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார். ஆனாலும் திருச்சி கிழக்கு மக்களுக்கு என் இதயத்தில் தனி இடம் இருக்கிறது என்றெல்லாம் விஜய் கூறினார். ஆனால் தற்போது அதே மக்களின் கோரிக்கையை கூட அவர் காது கொடுக்காமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கடந்த 120 வருடங்களாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறோம்.

தொழிற்சாலையில் பணியாற்றி பல நோய், நொடியுடன் வாழ்கிறோம். திருச்சி ஜமால் முகமது கல்லூரி தாளாளர் காஜா போலி பத்திரம் மூலமாக இடத்தை கைப்பற்ற நினைக்கிறார். அமைச்சர் ரமேஷ், அதிகாரிகளிடம் முறையிட்டோம் எந்த நடவடிக்கை இல்லை. முதலமைச்சரை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை. சந்திக்க விடாமல் அதிகாரிகள் தடுக்கிறார்கள். இங்குள்ள மக்கள் ஏழ்மையில் உள்ளார்கள். முதலமைச்சர் இதை தட்டி கேட்க வேண்டும்.

கைவிட கோரிக்கை

நாங்கள் இந்த ஆட்சிக்கு எதிரானவர்கள் இல்லை. விஜயால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். உங்களுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம். எங்களை பார்க்காமல் கூட சென்றால் எப்படி. எங்கள் பகுதியை காலி செய்யும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும். மக்களுக்கு நிரந்தர பட்டா கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். விஜய் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கையில் மக்கள் வீடு திரும்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+