அரசுக்கு தான் போலீஸ் வேலை செய்யனும்.. ஆளுங்கட்சிக்கு இல்ல! லெஃப்ட் ரைட் வாங்கிய ஹைகோர்ட்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்தால் ஒரு மாதிரியாகவும் எதிர்கட்சிகள் புகார் அளித்தால் வேறு மாதிரியாகவும் அணுகுமுறையை காவல்துறை கடைபிடிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறை அரசுக்கு தான் வேலை செய்ய வேண்டும். ஆளுங்கட்சிக்கு வேலை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

High Court Police DMK

நிகழ்ச்சியில் திமுக மகளிரணி நிர்வாகியும், திமுக பெண் கவுன்சிலருமான சுதா தீனதயாளன் பேசிய சில கருத்துகள் சர்ச்சியானது. நிகழ்ச்சி நடந்து சில நாட்களாகியுள்ள நிலையில், தற்போது தான் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சுதா தீனதயாளன்," சட்டப்பேரவையில் அமர்ந்து, எங்கள் தலைவர் (ஸ்டாலின்) அழகை குறை சொல்கிறார். எங்கள் தலைவருக்கு வயது 74. உனக்கு என்ன வயது 52 வயது தான்" ஆகிறது என்றதோடு, சில வார்த்தைகளையும் பேசினார். மேலும், முதல்வர் விஜய்யை ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதாக தவெகவினர் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக எஸ்பிலினேடு போலீசார் திமுக கவுன்சிலர் சுதாவின் கீழ் மீது பல்வேறு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதியரசர் ரமேஷ் முன்பாக விசாரணைக் கொண்டது. அப்போது சுதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, கவுன்சிலர் சுதாவுக்கு தற்போது 60 வயதாகிறது. இவர் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில் எதிர்காலத்தில் கவனத்துடன் பேசுவார் என உறுதி அளித்தார்.
'
இதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதியரசர் ரமேஷ்," அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பேச்சுரிமைக்கும் அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள பாதுகாப்பு புறந்தள்ளி கைது நடவடிக்கையை ஒரு தண்டனை வழங்கும் கருவியாக பயன்படுத்தக்கூடாது. அரசியல் ரீதியாக எழும் விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் காவல்துறையை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது.

ஆட்சியில் இருப்பவர்களை விமர்சிப்பதும் கேள்வி எழுப்புவதும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. ஒரு அரசியல் தலைவரை விமர்சித்தால் மட்டும் பொது அமைதிக்கு பிரச்சனை வந்து விடாது. அந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுரிமைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முதல்வர் குறித்து மனுதாரர் அவதூறாக பேசியிருந்தால் அவதூர் வழக்கு தொடர வேண்டும். அதை விட்டு அரசியல் உள்நோக்கத்தோடு குற்ற பிரிவுகளை பயன்படுத்தி போலீசார் நடவடிக்கை எடுப்பது சட்டவிரோதம் போல் இருக்கிறது. நாட்டில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அரசியல் விவாதங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக நடக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் ஐடி விங் வைத்திருக்கின்றனர்.

இதில் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதும் கிண்டல் செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது. ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்தால் ஒரு மாதிரியாகவும் எதிர்கட்சிகள் புகார் அளித்தால் வேறு மாதிரியாகவும் அணுகுமுறையை காவல்துறை கடைபிடிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறை அரசுக்கு தான் வேலை செய்ய வேண்டும். ஆளுங்கட்சிக்கு வேலை செய்யக்கூடாது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியின் எந்த பாகுபாடும் இல்லாமல் காவல்துறை செயல்பட வேண்டும். யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கில் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

எந்த ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டால் சில மணி நேரங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்கிறார். ஆனால் அதுவே ஆளுங்கட்சியினர் என்றால் வழக்கு பதிவு செய்வது கூட இல்லை என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆட்சியிலும் வைக்கப்படுகிறது. போலீசின் நடவடிக்கைகளை பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே காவல்துறை ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைபிடிப்பது காவல்துறை வழங்கும் சலுகை அல்ல. அரசியல் அமைப்புச் சட்டரீதியாக காவல்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை.

ஆளுங்கட்சி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்து பதிவிட்டதாக சமீபத்தில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவர் சாதாரண உடையில் வந்த போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அது போலி கணக்கு என்பது தெரிந்தும் அன்றைய தினமே அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தலைமைச் செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டு முதல்வருடன் சந்திக்கிறார். தவறு நடந்து விட்டது என அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதிகாலை வேளையில் ஒருவரை கைது செய்ய செல்லும்போது சமூக வலைதள பதிவின் உண்மைத்தன்மை குறித்து சரி பார்க்காத போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. ஒருவரின் சுதந்திரமான பேச்சை பறிக்கும் நோக்கில் நீதிமன்றங்கள் நிபந்தனை விதிக்க முடியாது. எனவே மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்குகிறேன் எனக் கூறி நிபந்தனை உடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+