ஒரு நொடி தான்.. வானில் 2 ஹெலிகாப்டர்கள் பயங்கர மோதல்.. பயணித்த அனைவரும் பலியான சோகம்
ஹெல்சின்கி: பின்லாந்தில் 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றொடொன்று பயங்கரமாக மோதிக்கொண்டது. அதில் ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.
எஸ்டோனியா தலைநகர் தாலினில் இருந்து நேற்று 2 ஹெலிகாப்டர்கள் பறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர்கள் கோக்மாகியில் ள்ள பிகாஜார்வி ஏர்ஃபில்ட் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த 2 ஹெலிகாப்டர்களும் தனியாருக்கு சொந்தமானதாகும்.

இந்த ஹெலிகாப்டர்கள் பின்லாந்தின் யூரா விமான நிலையத்தின் அருகே பறந்து சென்று கொண்டிருந்தன. ஹெலிகாப்டர் ஒன்றையொன்று முந்தியடி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று வானில் ஒன்றொடொன்று 2 ஹெலிகாப்டர்களும் மோதின. இதையடுத்து இரு ஹெலிகாப்டர்களும் அப்படியே தரையில் வந்து விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனை நேரில் பார்த்த அன்டி மார்ஜனேன் என்பவர் உடனடியாக அவசர பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அவரச உதவி குழுவினர் விரைந்து வந்தனர். ஹெலிகாப்டரில் பிடித்த தீயை அணைத்தனர். அப்போது ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரும் பலியாகி இருப்பது தெரியவந்தது.
ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும், மற்றொன்றில் 3 பேரும் இருந்த நிலையில் அவர்கள் 5 பேரும் பலியாகினர்.
இந்த விபத்தில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தொழிலதிபரும், பைலட்டுமான ஒலேக் சேனாஜால்க் இறந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணம் என்ன? பைலட் செ்த தவறா? தொழில்நுட்ப பிரச்சனையைா அல்லது வேறு பிரச்சனையா என்பது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்த 2ஹெலிகாப்டர்களும் மிகவும் நெருக்கமாக பறந்து சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. இதற்கிடையே வானில் 2 ஹெலிகாப்டர்களும் நெருங்கியபடி பறந்த போட்டோக்கள் வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications