கள்ளக்காதல் விவகாரம்: சீனாவில், 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை
பெய்ஜிங்: சீனாவில், கள்ளக்காதல் விவகாரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆறு மாடிக் கட்டிடம் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணமான குவாங்ஸி ஷுயாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து நேற்று 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குற்றவாளியைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் லூ என்பதும், கொலை செய்யப்பட்ட சிறுவனது தாய்க்கும், லூ வுக்கும் இடையே முன்பு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், லூவிற்கும் சிறுவனின் தாயாருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த லூ சிறுவனைத் தூக்கி 6 மாடியிலிருந்து வீசிக் கொலை செய்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications