20 வருடம் முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்.. பல்லாயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் கிடைத்த அதிசயம்!
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 20 வருடம் முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 20 வருடம் முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிளாப்பி டிஸ்க்குகள் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தும் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போது உலகில் யாருமே பிளாப்பி டிஸ்க்குகளை பயன்படுத்துவதில்லை.
இந்த நிலையில் அந்த பிளாப்பி டிஸ்க்குகள் பல்லாயிரம் அடி உயரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

கொண்டாடினார்கள்
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு 20 வருடம் முடிந்துவிட்டது. 1998ல் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. அதன் 20வது வருட கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.

சோதனை செய்தனர்
இந்த நிலையில் 20 வருட கொண்டாட்டம் என்பதால் அங்கிருக்கும் பழைய பொருட்களை எல்லாம், தேடி பிடித்து அதன் புகைப்படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதாவது ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருக்கும் பழமையான பொருட்களை போட்டோ எடுத்து டிவிட்டரில் அப்லோட் செய்தனர். அப்போது அங்கிருந்த பிளாப்பி டிஸ்குகள் கண்டுபிடிக்கப்பட்டது.

20 வருடம் முன்
இந்த பிளாப்பி டிஸ்க் 20 வருடம் முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது அந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்ட சில நாட்களில் இந்த பிளாப்பி டிஸ்க் மொத்தமாக காணாமல் போய் இருக்கலாம். அதை இப்போதுதான் கண்டுபிடிக்கிறார்கள்.

என்ன இருக்கிறது
இதற்குள் என்ன தகவல்கள் இருக்கிறது என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. இதனுள் 20 வருடத்திற்கும் முந்தைய முக்கியமான விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதை பூமிக்கு எடுத்து வந்த பின் சோதனை செய்ய போவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications