நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 22 “பைலட்” திமிங்கலங்கள் பரிதாப பலி!
வெல்லிங்டன்: நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 22 பைலட் ரக திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்கு செல்ல இயலாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பினை ஏற்படுத்தியது.
ஓஹிவா துறைமுக பகுதியில் கரை ஒதுங்கிய சுமார் 21 திமிங்கலங்களை மீட்பு பணியாளர்கள் மீண்டும் கடலுக்குள் கொண்டு விட்டனர்.
ஆனால், கடலின் ஆழத்திற்கு திமிங்கலங்களால் செல்ல முடியாததால் அவை கூட்டத்தோடு பலியாகியுள்ளன.
58 திமிங்கலங்கள் உயிரிழப்பு:
இதனால் கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து கரை ஒதுங்கி பலியான திமிங்கலங்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
வீணாகிப் போன நம்பிக்கை:
கரை ஒதுங்கும் திமிங்கலங்களை மீட்கும் தன்னார்வ குழுவை சேர்ந்த டாரென் க்ரோவர் இது குறித்து தெரிவிக்கையில், "மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலங்கள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடும் என்ற எங்களின் நம்பிக்கை வீணாகிவிட்டது.
வருத்தமான முடிவு:
இது கடலுக்குள் திமிங்கலங்களை வெற்றிகரமாக அனுப்பியதற்கு கிடைத்துள்ள வருத்தமான முடிவு.
இயற்கை மாறினால் வேதனைதான்:
அழகான இந்த திமிங்கலங்கள் அவற்றின் இயற்கையான சூழலில் இருந்து வெளியே வந்த பிறகு ஒவ்வொரு நிமிடமும் அவற்றிற்கு வேதனையாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்" எனக் கூறியுள்ளார்.
விஞ்ஞானிகளுக்கே காரணம் தெரியவில்லை:
நியூசிலாந்தில் கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழப்பது வழக்கமாகியுள்ள நிலையில், இதற்கான சரியான காரணம் குறித்து தெளிவான புரிதல் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications