For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

22 வயது இளம்பெண்.. சர்வாதிகாரியே பார்த்து நடுங்கும் "மியான்மர் பேரழகி".. போர் உருவாக்கிய புரட்சி பூ!

Google Oneindia Tamil News

மியானமர்: மியான்மரில் நடக்கும் சர்வாதிகார ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டில் 22 வயதே ஆன பெண் பேரழகி ஒருவர் திமிறி எழுந்துள்ளார்!

தினமும் நூற்றுக்கணக்கான துப்பாக்கி சூடு தாக்குதல்.. சொந்த நாட்டு மக்கள் மீதே ஏவுகணை தாக்குதல்.. சாரைசாரையாக அகதிகளாக வெளியேறும் மக்கள் என்று.. உள்நாட்டு போர் ஒன்றை அமைதியாக நடத்தி வருகிறது மியான்மர் ராணுவம்.

அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ராணுவம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். லட்சக்கணக்கானோர் சொந்த நாட்டை காலி செய்துவிட்டு தாய்லாந்துக்கும், பூடானுக்கும் படையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ராணுவ ஆட்சி

ராணுவ ஆட்சி

கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தல் முடிந்த சில நிமிடத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் அங்கு ஆட்சியை கைப்பற்றினார். தேர்தல் முடிவு முறைகேடானது, அதனால் முடிவை நிறுத்துவைத்துவிட்டு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார்... அப்போது தொடங்கிய உள்நாட்டு மக்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பிடன்

பிடன்

அமெரிக்க அதிபர் பிடன் தொடங்கி இங்கிலாந்து அரசு வரை பல நாடுகள் மியான்மரின் ராணுவ தளபதி மின் ஆங்கிற்கு எதிராக பேசினாலும் கூட.. மியான்மர் ராணுவமோ எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தங்கள் சொந்த நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. மக்களை தாக்க மாட்டோம் என்று பொய்யான வாக்குறுதியை ஐநாவில் அறிவித்துவிட்டு, தொடர்ந்து உள்நாட்டு புரட்சியாளர்களை குறி வைத்து தாய்லாந்து ராணுவ தளபதி மின் ஆங் தாக்கி வருகிறார்.

சர்வாதிகாரி

சர்வாதிகாரி

கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத உள்நாட்டு போரை மின் ஆங் நடத்தி வருகிறார். ரஷ்யா, சீனாவின் மறைமுக சப்போர்ட்டும் கூட ராணுவ தளபதி மின் ஆங்கிற்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது. இவரின் சர்வாதிகாரத்தை பிடன் உள்ளிட்டவர்கள் எதிர்த்தும் கூட எதுவும் மாறவில்லை. தொடர்ந்து சொந்த நாட்டு மக்களை தாக்கி ஹிட்லர் பாணியில் ஆட்சி நடத்தி வரும் மின் ஆங் ஒரே ஒரு விஷயத்தை எதிர்கொள்ள முடியாமல் நடுங்கி போய் உள்ளார்.. உலகின் எல்லா சர்வாதிகாரிகளும் பார்த்து நடுங்கிய விஷயம்தான் அது.. பெண் புரட்சி!

மியான்மர்

மியான்மர்

ஆம் மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான சர்வதேச குரலாக 22 வயது இளம்பெண் ஒருவர் மாறியுள்ளார். மியான்மரில் நடக்கும் அட்டூழியங்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வேலையை சத்தமாக செய்து வருகிறார் 22 வயது ஹான் லே. ஒரு புரட்சி பெண்ணை பேரழகி என்று சொல்ல காரணம் என்ன என்று நீங்கள் கேட்கலாம்... இவர் உண்மையில் பேரழகிதான். மியான்மர் ராணுவத்தை நடுங்க வைத்து இருக்கும் ஹான் லே கடந்த வருடம்தான் மிஸ் மியான்மர் கிராண்ட் என்னும் மியான்மர் நாட்டுக்கான தேசிய அழகி விருதை தாய்லாந்தில் வென்றார்.

தேசிய விருது

தேசிய விருது

அழகி விருது பெற்ற ஹான் லே.. தன் அழகை பற்றி பேசிவிட்டு சென்றுவிடுவார் என்றுதான் மேடையில் இருந்த எல்லோரும் நினைத்தனர். ஆனால் ஹான் லேவோ.. அவார்டை கீழே வைத்துவிட்டு .. மியான்மர் ராணுவத்தை மேடையிலேயே விளாசி தள்ளினார். ராணுவம் ஆட்சியை பிடிக்கும் முன்பே ராணுவம் செய்யும் அட்டூழியங்களை பட்டியலிட்டு மேடையில் பேசினார்..எங்கள் நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.. உலக நாடுகள் எங்களை திரும்பி பார்க்க வேண்டும்.. இல்லையென்றால் மியான்மர் மக்கள் இனமே அழிந்துவிடும், என்று மேடையிலேயே குறிப்பிட்டார்.

அரசியல்

அரசியல்

அதற்கு முன் மியான்மர் அரசுக்கும் ராணுவத்திற்கும் எதிராக சில இடங்களில் போராட்டம் நடத்தி இருந்தாலும் ஹான் லே கவனிக்கப்பட்டது அந்த மேடையில்தான். அந்த அழகி போட்டிக்கு செல்லும் போதே மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக்கொண்டு, குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டுதான் ஹான் லே தாய்லாந்து சென்றார். இனி மியான்மர் திரும்ப முடியாது என்று அவருக்கு அப்போதே தெரியும். தாய்லாந்தில் ஹான் லே எப்போது மியான்மர் அரசுக்கு எதிராக பேசினாரா அப்போதில் இருந்து அவர் ராணுவத்தால் தேடப்பட்டு வருகிறார்.

தேடல்

தேடல்

இவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மியான்மர் ராணுவம் தேடி வருகிறது. "விட்ச் ஹன்ட்" போல இவரை பிடிப்பதற்காக உளவாளிகளை அனுப்பி உள்ளது, அண்டை நாட்டு ராணுவ உதவிகளையும் மியான்மர் ராணுவம் கேட்டுள்ளது. ஹான் லே செய்வது எல்லாம் ஒரே விஷயம்தான்.. மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் பேசுவது. தனக்கு கிடைக்கிற சர்வதேச மேடைகளில் எல்லாம் மியான்மர் அவலங்களை வெளியே கொண்டு வருகிறார் ஹான் லே.

ஹான் லே

ஹான் லே

இவரின் பேச்சுதான் மியான்மர் ராணுவத்தை நடுங்க வைக்கிறது. மியான்மர் மக்களின் ஒரே நம்பிக்கையாக தற்போது இவர் உருவெடுத்துள்ளார். எப்படியாவது இவரை கைது செய்து கொன்றுவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் மியான்மர் ராணுவம் இருக்கிறது. இவரின் கல்லூரி நண்பர்கள் இரண்டு பேரை ஏற்கனவே அந்நாட்டு ராணுவம் கொன்றுவிட்டது. இவரின் குடும்ப உறுப்பினர்களை ராணுவம் தேடி வருகிறது.

 கொலை

கொலை

இவரின் குடும்பத்தினர் மியான்மரில் இருந்தாலும், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளனர். தாய்லாந்தில் இருந்து கொண்டு, மியான்மர் ராணுவம் எழுப்பிய இரும்பு கோட்டையை பூக்களை வைத்து ஹான் லே தகர்த்துக்கொண்டு இருக்கிறார். இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மியான்மருக்கு எதிராக பேசுவதற்கு ஹான் லே முக்கியமான காரணம் என்று சர்வாதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியான்மருக்கும் சர்வதேச மீடியாவிற்கும் இடைப்பட்ட பாலமாக இவர் திகழ்கிறார்.

நம்பிக்கை

நம்பிக்கை

மியான்மரில் நடக்கும் அவலங்களை தினமும் தனது உறவினர்கள் மூலமும், புரட்சியாளர்கள் மூலமும் தெரிந்து கொண்டு அதை சர்வதேச தளத்திற்கு ஹான் லே கொண்டு செல்கிறார். இதுதான் அந்நாட்டு சர்வாதிகாரம் இவரை பார்த்து நடுங்க காரணம்.. நான் அழகி போட்டியில் என் நாட்டை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன்.. எனக்கு தெரியும் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று.. ஆனாலும் துணிந்துதான் பேசினேன்.. இனியும் அச்சப்படாமல் ராணுவ ஆட்சி முடியும் வரை பேசுவேன் என்று ஹான் லே பேட்டி அளித்துள்ளார்.

சர்வதேச அழுத்தம்

சர்வதேச அழுத்தம்

தங்கள் நாட்டின் நம்பிக்கையாக ஹான் லேவை மியான்மர் மக்கள் பலர் பார்க்கிறார்கள். ஆங் சன் சுகியை பார்த்து ஏமாந்துவிட்டோம்.. ஆனால் ஹான் லே எங்களுக்காக தைரியமாக குரல் கொடுக்கிறார். எங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார் என்று அந்நாட்டு மக்கள் அவரை கொண்டாட தொடங்கி உள்ளனர். ஹான் லேவின் புகழை பார்த்து அவரை எப்படியாவது தாய்லாந்தில் இருந்து கடத்தி கொண்டு வர வேண்டும் என்று மியான்மர் ராணுவம் திட்டங்களை வகுத்து வருகிறது .

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஆனால் ஹான் லே தாய்லாந்தில் அடிக்கடி இடம் மாறி, புதிய இடங்களில் தங்கி, மியான்மர் உளவாளிகள் கண்ணில் சிக்காமல், பாதுகாப்பாக இருக்கிறார். இவரின் குடும்பமும் மியான்மாரிலேயே ராணுவத்திடம் மாட்டாமல் சூற்றி வருகிறது. ராணுவத்திற்கு எதிராக என்ன நடந்தாலும்.. என் போராட்டம் தொடரும் என்று நேற்று சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹான் லே.. மியான்மர் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒற்றை சக்தியாக உருவெடுத்து வருகிறார்!

English summary
22-year-old beauty queen Han lay becomes the symbol of Hope against dictartorship army rule in Myanmar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X