இயேசு கிறிஸ்து போல உயிர்த்தெழுவேன்.. கைகளை கட்டி.. தன்னை தானே குழிதோண்டி புதைத்து.. பகீர் பாஸ்டர்
: மண்ணோடு மண்ணாக தன்னை புதைத்து கொண்ட பாதிரியார் உயிரிழந்தார்
ஜோகன்னஸ்பர்க்: இயேசு கிறிஸ்துவை போலவே தானும் 3 நாட்களில் உயிர்த்தெழுந்துவிடுவேன் என்று சொல்லி தன்னை தானே குழி தோண்டி புதைத்து கொண்டு உயிரிழந்த பாதிரியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பின மக்களின் பூமி ஆப்பிரிக்கா இப்போது வரை வளர்ச்சி பெறாத நாடாக உள்ளது.. இதில், நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் இன்னும் பின்தங்கியுள்ள ஒருநாடு தான் ஜாம்பியா...
இது ஒரு சிறிய ஊர்தான்.. ஆனால், அடிமைத்தன வாழ்க்கை, மூடநம்பிக்கைகளில் மக்கள் சிக்கி உள்ளனர்.. போதுமான கல்வி வளர்ச்சியும் இங்கு வரவில்லை.

மூடநம்பிக்கை
பெரும்பாலான மனிதர்கள் காட்டுமிராண்டிகளாகவும், மூட நம்பிக்கையில் திளைத்தவர்களாகவும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இப்படிப்பட்ட ஊரில் ஒருவர் அதிர்ச்சிகரமான காரியத்தை செய்துள்ளார்.. அவர் ஒரு பாஸ்டர்.. மிகவும் கடவுள் பக்தி உள்ளவர்... பல வருடங்களாகவே தனித்து வசித்து வந்தவர்.. இந்த பாதிரியார் பெயர் ஜேம்ஸ் சக்காரா.. 22 வயதுதான் ஆகிறது.

உயிர்த்தெழுதல்
இவர் தன்னை தானே இயேசு கிஸ்துவின் தூதுவர் என்று சொல்லி கொண்டு வந்துள்ளார்.. அது மட்டுமல்ல, போன ஜென்மத்தில் இயேசுவின் 14 சீடர்களுள் ஒருவராக இருந்தேன் என்றும் அந்த பகுதி மக்களிடம் சொல்லி பரபரப்பை கிளப்பி வந்துள்ளார்.. இந்நிலையில், சம்பவத்தன்று, நான் இயேசுவின் சீடன் என்தால் அவரை போலவே 3 நாட்களுக்கு பிறகு உயிரித்தெழுந்துவிடுவேன் என்று சொல்லி, தான் சார்ந்திருக்கும் சர்ச் பக்கத்திலேயே மண்ணில் குழித்தோண்டி, தன்னைத்தானே புதைத்து கொண்டார்..

உயிரிழப்பு
சவக்குழியில் பாதிரியார் போய் படுத்துக்கொண்டதுமே, அந்த சர்ச்சை சேர்ந்த இன்னொரு பாதிரியார் அவரது கைகளை கட்டியுள்ளார்... ஊழியர்கள் 2 பேர் வந்து, மண்ணை அள்ளி போட்டு அந்த இடத்தையே மூடியுள்ளனர்.. பிறகு 3 நாட்கள் கழித்து, பாதிரியார் வெளியே உயிருடன் எழுந்து வருவார் என்று காத்து கிடந்துள்ளனர்.. ஆனால், பாதிரியார் வரவே இல்லை.. பிறகுதான் அந்த பாதிரியார் மண்ணுக்குள்ளேயே உயிரிழந்தது தெரியவந்தது.

சடலம்
இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்... போலீசாரும் விரைந்து வந்து பாதிரியாரின் சடலத்தை தோண்டி எடுத்து சென்றனர்.. நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணையும் நடத்தி,மற்றொரு பாதிரியாரை கைது செய்தனர்.. ஆனால், மண்ணை போட்டு குழி தோண்டி புதைத்த சர்ச் ஊழியர்கள் 2 பேரை காணோமாம்.. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications