லெபனான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி.. 24 பேரை கொன்ற ஏவுகணைகள்! அமெரிக்கா சமரச முயற்சி
டெல்அவிவ்: பாலஸ்தீனத்துடனான மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. நேற்று இஸ்ரேல் மீது லெபனான் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல், தனது தாக்குதல் மூலம் 24 பேரை கொன்று குவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது. போரில் ஹமாஸ் தலைவர்களுடன் சேர்த்து 40,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸுடன் நிற்காமல், லெபனானுக்கும் தன்னுடைய தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. லெபனானிலிருந்து இருந்து இயங்கும், ஹிஸ்வுல்லா அமைப்பு, ஹமாஸுக்கு உதவுவதாகவும், இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

எனவே லெபனான் மீது இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரை தொடுத்திருக்கிறது. நேற்று இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லெபனான் ராக்கெட்களை கொண்டு இஸ்ரேலை தாக்கியது. இதில் 7 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 4 பேர் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், 3 பேர் இஸ்ரேலியர்கள் எனவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தவிர, காசாவில் இயங்கி வந்த கடைசி மருத்துவமனையையும் இஸ்ரேல் தாக்கி அழித்திருக்கிறது. இதன் மூலம் காசாவில் டயாலிசிஸ் நோய்க்கான மருத்து தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையில்தான் அனைத்து முக்கிய மருந்துகளும் இருந்திருக்கின்றன. அதேபோல இந்த தாக்குதல் மூலம் காசாவில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஹமாஸ் தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் போர் உடனடியாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏற்கெனவே பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புதிய தாக்குதல் மீண்டும் விவாதமாக வெடித்திருக்கிறது.
இதே நிலை நீடித்தால் போர் மிக விரைவில் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவும் எனவும் அச்சம் எழுந்திருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications