வெடிக்கும் உலகப்போர்? ரஷ்யாவிற்கு எதிராக குதித்த 25 டாப் நாடுகள்! உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக 25 நாடுகள் கரம் கோர்த்து உள்ளது.

Recommended Video

    Russia - China-வின் அடுத்த டார்கெட் இந்த நாடுதான்.. எச்சரிக்கும் Grandmaster Garry Kasparov

    உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு உள்ளே ரஷ்யாவின் 50 சதவிகித படைகள் உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அதனால் தாக்க போகிறோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த போர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் தற்போது உக்ரைனுக்கு நேரடியாக படை உதவிகளை யாரும் வழங்கவில்லை. ராணுவ உபகரணங்கள், பொருளாதார ரீதியான உதவிகளை மட்டுமே உக்ரைனுக்கு உலக நாடுகள் வழங்கி வருகின்றன. ஆனால் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, எங்களுக்கு அனுதாபம் தேவை இல்லை. எங்களுக்கு உண்மையான உதவி தேவை. உலக நாடுகள் எங்களுக்கு ராணுவ ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    உதவி

    உதவி

    பல்வேறு காரணங்களுக்காக தொடக்கத்தில் உக்ரைனுக்கு உதவ உலக நாடுகள் தயக்கம் காட்டியது. இந்த நிலையில்தான் தற்போது உக்ரைனுக்கு உலக நாடுகள் பல உதவ முன் வந்துள்ளது. அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகள் என்று மொத்தம் 25 நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிராக இந்த நாடுகள் ஒன்றாக உக்ரைனுக்கு பின் சேர்ந்து உள்ளன.

    25 நாடுகள் முதல்முறையாக

    25 நாடுகள் முதல்முறையாக

    இதில் 2ம் உலகப்போரில் இருந்த சில அணி சேரா நாடுகள், உக்ரைனை இதற்கு முன் ஆதரிக்காத சில நாடுகள் முதல்முறையாக உக்ரைனை இந்த முறை ஆதரித்துள்ளது. பெரும்பாலும் உக்ரைனுக்கு ஆதரவாக இந்த நாடுகள் விமானங்கள், குண்டுகள், துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ஏவுகணை மறுப்பு சிஸ்டங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன. பொருளாதார ரீதியான உதவிகளையும் இந்த நாடுகள் வழங்க உள்ளன.

    அமெரிக்கா உதவி

    அமெரிக்கா உதவி

    இன்னொரு பக்கம் உக்ரைனுக்கு உதவ அமெரிக்காவும் முன் வந்துள்ளது. உக்ரைனுக்கு உதவும் வகையில் 350 மில்லியன் டாலர் ராணுவ உபகாரணங்கள், பணம், ஆயுதங்களை வழங்க பிடன் ஒப்புதல் வழங்கி உள்ளார். உக்ரைன் நேட்டோ நாடு கிடையாது. இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் பொருள் ரீதியான உதவிகளை மட்டுமே அமெரிக்கா வழங்கி உள்ளது.

    இந்தியா இல்லை

    இந்தியா இல்லை

    இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. இதனால் இந்தியா யாருக்கும் உதவி செய்யவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது. அதே சமயம் புடினிடம் பேசிய பிரதமர் மோடி போரை நிறுத்தும்படி கூறினார். உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியிடமும் பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

     SWIFT

    SWIFT

    இதில் ஒரு கட்டமாக சர்வதேச பண பரிவர்த்தனை தளமான SWIFT தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவை SWIFT சேவையில் இருந்து தடை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவிற்கு பரிந்துரை செய்துள்ளன. விரைவில் SWIFT தளத்தில் இருந்து ரஷ்யா அதிகாரபூர்வமாக நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    ரஷ்யா மிரட்டல்

    ரஷ்யா மிரட்டல்

    இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளை ரஷ்யா மிரட்டி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ரஷ்யா பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளை மிரட்டி வருகிறது. நீங்கள் நேட்டோ படையில் இணைய கூடாது. இணைந்தால் நீங்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் இந்த செயல் காரணமாக உலக அளவில் போர் வெடிக்குமோ, மோதல் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+