எகிப்து.. 2500 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்ட 'மம்மி'.. உள்ளே பார்த்தால்.. ஆச்சரியம்
கெய்ரோ: எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களுக்கு முன்னால் வைத்து, 2500 வருடம் பழமையான மம்மி சவப்பெட்டியைத் திறந்தனர். அந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது.
எகிப்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில், சடலங்களை புதைக்கும் பகுதியில், 59 சீல் செய்யப்பட்ட சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மரத்தாலான பெட்டிகளுக்கு உள்ளே சடலங்கள் இருந்தன.
எகிப்தியர்கள் பதப்படுத்தி உடலை புதைப்பார்கள். இதற்கு மம்மி என்று பெயர். எனவே சடலம் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பது வழக்கம்.

59 பெட்டிகள்
இந்த நிலையில்தான், கண்டுபிடிக்கப்பட்ட 59 பெட்டிகளில், ஒரு பெட்டி, பொதுமக்கள் சிலர் கூடியிருந்தபோது அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டிகள் நல்ல நிலையில் அரித்துப்போகாமல் இருந்தது. எனவே கூடியிருந்த மக்களிடையே, பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. உடலும் இதேபோல கெட்டுப்போகாமல் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்புகளோடு நின்றிருந்தனர்.

திறந்து பார்த்தபோது
சவப்பெட்டியை அதிகாரிகள் திறந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம். ஏனெனில், உள்ளே ஒரு மம்மி அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடன் இருந்தது. அதுமட்டுமல்ல அந்த உடல் வர்ணங்கள் தீட்டப்பட்ட அலங்காரத்தோடு காட்சியளித்தது. கண்கள் அகல விரிய அந்த உருவம் இருந்தது. இதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டுபோயினர்.

மம்மிகளை திறக்க கூடாதாமே
அதேநேரம், எகிப்து நாட்டில், மம்மிகளை திறக்க கூடாது என்பது நம்பிக்கையாக உள்ளதாம். நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், மம்மியின் கல்லறையைத் திறப்பது மரணத்தை ஏற்படுத்தும் என்றும், அது சாபம் என்றும் அங்குள்ள நாட்டுப்புற கலாச்சாரத்தில் ஒரு நம்பிக்கை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
|
தேவையா இப்போ
இப்படியான ஒரு ரிஸ்க்கை வைத்துக் கொண்டு, 2020வது வருடத்தில் மம்மியை திறக்கலாமா, இன்னும் சில மாதங்கள் கழித்திருந்தால், நல்ல ஆண்டு பிறந்திருக்குமே என்றெல்லாம் நெட்டிசன்கள் கூற ஆரம்பித்துள்ளனர். மேலும், மம்மிக்குள் உள்ள உடல்களில் உள்ள கிருமிகளையும், வைரஸ்களையும் இப்போதுள்ள மனிதர்களால் தாக்குப்பிடிக்க முடிவது கஷ்டம் எனவும் பல விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உடலை திறந்தபோது கூட இருந்தவர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு அது மற்றவர்களுக்கு பரவினால் என்னவாகுமோ என்ற அச்சம் சிலருக்கு இருக்கிறது.
|
போன வருஷம் செய்த தவறு
கடந்த ஆண்டு கல்லறையை திறந்து மம்மியை வெளியில் எடுத்தபோது, இது சாபம் என்று கூறினர். ஆனால், நாம் எப்படி சபிக்கப்படுவோம் என்று கேட்டு அனைவரும் சிரித்தோம்? ஆனால் இப்போது உலகம் எப்படி பாதிப்பில் சிக்கியது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு இந்த நெட்டிசன் கூறுகிறார்.
|
சபித்து விடாதீர்கள்
ஒவ்வொரு முறையும், எகிப்து மம்மி கல்லறையைத் திறக்கும் வீடியோவைப் பார்க்கும்போது நான் மிக வேகமாக வேறு போஸ்டுக்கு ஓடி விடுகிறேன். என்னை சபித்து விடாதீர்கள் மேடம்.. என்று கூறிக்கொள்கிறேன். இவ்வாறு சொல்கிறார் இந்த நெட்டிசன்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications