நார்வேயில் சோகம்... பைசர் தடுப்பூசி போட்ட 29 முதியவர்கள் உயிரிழப்பு!
ஒஸ்லோ: நார்வே நாட்டில் பைசர் கொரோனா தடுப்பூசி போட்ட 29பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பல்வேறு சந்தேகங்கள்
உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகினறன. இந்த நிலையில் நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்ட 29பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

29பேர் உயிரிழப்பு
பைசர் தடுப்பூசி செலுத்தப்பெற்ற 29முதியவர்கள் உயிரிழந்ததாக நார்வே அரசு தெரிவித்துள்ளது. இது தவிர இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த இறப்புகள் குறித்து விசாரணையை நார்வே அரசு முடுக்கிவிட்டுள்ளது. பலவீனமான உடலைக் கொண்ட 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே பாதகமான எதிர்வினைகள் இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிரடி முடிவு
ஆனால் அவர்கள் பைசர் தடுப்பூசியால்தான் இறந்தார்கள்? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இறந்த 23 பேரில் 13 பேர் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பாவில் தடுப்பூசி விநியோகத்தை தற்காலிகமாக குறைக்க பைசர் முடிவு செய்தது.

எச்சரிக்கை
மேலும் 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எதிராக நார்வே பொது சுகாதார நிறுவனம் இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்கள் தடுப்பூசியால் பெரிதும் பயனடையமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் இருந்து இதுவரை நார்வேயில் பைசர் மற்றும் மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை 30,000-க்கும் மேற்பட்டோர் பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications