மயக்க ஊசி போட்டு.. எனர்ஜி ட்ரிங்க் கொடுத்து.. இளைஞரை 3 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த 3 பெண்கள்!
தென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே கொடுத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் 23 வயது இளைஞரை 3 பெண்கள் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே கொடுத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் இளைஞர் ஒருவரை 3 பெண்கள் சேர்ந்து வெறித்தனமாக கூட்டு பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரத்தின் கிழக்கு பகுதியில் 15 பேர் பயணம் செய்யும் டாக்ஸியில் தனது வீட்டுக்கு செல்வதற்காக இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். டாக்ஸியில் ஏறிய உடனேயே அந்த இளைஞருக்கு வலுக்கட்டாயமாக மயக்க ஊசி போடப்பட்டுள்ளது.

தனி அறையில்
அந்த இளைஞர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத தனி அறையில் ஒரு படுக்கையில் இருந்துள்ளார். மயக்கம் தெளிந்த இளைஞருக்கு 3 பெண்கள் சேர்ந்து எனர்ஜி ட்ரிங்க் மட்டும் கொடுத்துள்ளனர்.

வெறும் எனர்ஜி ட்ரிங்க்
பின்னர் 3 பெண்களும் மாறி மாறி அந்த இளைஞரை பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த இளைஞரை தூக்க விடாமல் வெறும் எனர்ஜி ட்ரிங்க்கை மட்டுமே கொடுத்து 3 பெண்களும் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

உடல் நலம் பாதிப்பு
மூன்று நாட்களுக்கு பிறகு அந்த இளைஞரை ஆளில்லாத இடத்தில் அரை நிர்வாணமாக விட்டுச் சென்றுவிட்டனர். அந்த இளைஞரை தூங்க விடாமல் தொடர்ந்து பலாத்காரம் செய்ததாலும் வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே குடிக்கக் கொடுத்ததாலும் அந்த இளைஞரின் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் வலை வீச்சு
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட 3 பெண்களையும் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று தென் ஆப்பிரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பலாத்காரங்கள்
தென் ஆப்பிரிக்காவில் ஆண், பெண் என பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. ஒரு வருடத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications