ஈராக்குக்கு மேலும் 300 ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கான யுத்தத்துக்கு ஆலோசனகளை வழங்க மேலும் 300 ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பான உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது. அத்துடன் தாங்கள் கைப்பற்றிய சிரியா, ஈராக் பிரதேசங்களை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டைப் பிரகடனப்படுத்தியும் உள்ளனர்.

உலக நாடுகள் ஆதரவு
இந்த நிலையில் ஈராக் அரசுக்கு ஆதரவாக உலக நாடுகள் களம் இறங்கி தீவிரவாதிகள் வசமுள்ள நகரங்களை மீட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிரியா தாக்குதல்
முதலில் ஈராக்கில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது சிரியா திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியது.

அமெரிக்கா வியூகம்
அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் உள்ள திக்ரித் நகரை மீட்க ஈராக் ராணுவம் போராடிப் பார்த்தது. இதற்கு அமெரிக்காவின் ராணுவ ஆலோசகர்கள் வியூகம் வகுத்துக் கொடுத்தனர். ஆனாலும் அரச படைகளால் முன்னேற முடியவில்லை.

ரஷ்யா உதவி
இந்த நிலையில் ரஷ்யாவும் தம் பங்குக்கு போர் விமானங்களை ஈராக்குக்கு வழங்கியுள்ளது. இவையும் விரைவில் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட இருக்கிறது.

மேலும் 300 வீரர்கள்
தற்போது 300 ராணுவ வீரர்களை ஆலோசனை வழங்கும் பணிக்காக ஈராக்குக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனால் அடுத்த ஓரிருநாட்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஈராக்கின் தாக்குதல் உக்கிரமடையக் கூடும் எனக் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications