துருக்கிக்கு விழுந்த அடி.. பாக்., ஆதரவாக நின்றதால் வந்த வினை.. சொல்லியடித்த இந்தியர்கள்.. டேட்டா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நடந்தது. இந்த போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டது. நம் நாடு மீது தாக்குதல் நடத்த துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவியது. இதையடுத்து துருக்கியை நம் நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கினர். இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி தற்போது பெரும் இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளது.

துருக்கி.. நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கும் எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்தது.

36-percent-of-indian-tourist-drop-in-turkey-on-june-due-to-erdogan-support-pakistan-in-operation-sin

‛ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம், விமானப்படை தளம், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த போரில்துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவியது. துருக்கி நாட்டின் ட்ரோன்கள் மற்றும் அந்த நாட்டின் ஆபரேட்டர்களை பயன்படுத்தி நம் நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. ஆனால் நம் நாடு சாமர்த்தியமாக செயல்பட்டு பாகிஸ்தான், துருக்கியின் தாக்குதல் வியூகத்தை தவிடு பொடியாக்கியது.

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கியை நம் நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கினர். துருக்கி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இது துருக்கியின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த நடவடிக்கை தற்போது துருக்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சுற்றுலா துறையில் இந்தியர்களின் வறுமை மளமளவென சரிந்துள்ளது.

இதுதொடர்பாக துருக்கி நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛கடந்த ஜூன் மாதம் 24,250 இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தனர். இது கடந்த 2024ம் ஆண்டை ஒப்பிடும்போது 36 சதவீதம் குறைவு. ஏனென்றால் 2024 ஜூன் மாதம் 38,307 இந்தியர்கள் துருக்கிக்கு வந்து இருந்தனர். அதேபோல் கடந்த ஜனவரி மற்றும் ஜூன் வரை 1,39,215 இந்தியர்கள் துருக்கிக்கு வந்தனர். இது கடந்த 2024ம் ஆண்டில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 373 என்ற அளவில் இருந்தது. இது முதல் 6 மாத நிலவரப்படி 15 சதவீத சரிவாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சரிவு என்பது கடந்த மே மாதம் முதல் தொடங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை துருக்கி கண்டித்தது. இதையடுத்து துருக்கியை மக்கள் புறக்கணிக்க தொடங்கினர். கடந்த 2024 மே மாதம் 41,544 பேர் துருக்கி சென்ற நிலையில் இந்த ஆண்டு மே மாதம் 31,659 பேர் மட்டுமே சென்றனர். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கடந்த ஆண்டு மே மற்றும் இந்த ஆண்டு மே மாதங்களை ஒப்பிடும்போது 24 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதன்பிறகு ஜுன் மாதம் துருக்கிக்கு 24,250 சுற்றுலா பயணிகள் மட்டும் நம் நாட்டில் இருந்து அங்கு சென்றுள்ளனர். இப்படி தொடர்ந்து நம் நாட்டு மக்கள் துருக்கி செல்வதை குறைத்து வருகின்றனர். இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு நம் நாட்டில் இருந்து துருக்கிக்கு மொத்தம் 3,30,985 பேர் விசிட் செய்திருந்தனர். இது 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகம். துருக்கிக்கு அதிகமாக ஐரோப்பா மற்றும் ரஷ்யா மக்கள் தான் சுற்றுலா செல்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளால் நம் நாட்டில் இருந்து மக்கள் அதிகம் செல்ல தொடங்கினர். கடந்த 2018 - 19 காலக்கட்டத்தில் இந்தியா - துருக்கி இடையேயான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டது. இதுவும் இந்தியர்கள் துருக்கிக்கு அதிகம் சுற்றுலா செல்ல காரணமாக அமைந்தது.

ஆனால் தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை அதிகரிக்க ஆர்வம் காட்டுகிறது. ஆனால் மத்திய அரசு அனுமதி மறுக்கிறது. அதேபோல் இண்டிகோ, துருக்கி ஏர்லைன்ஸிடம் இருந்து குத்தகை அடிப்படையில் இயக்கிய விமான ஒப்பந்தமும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தான் செல்லும். அதன்பிறகு நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதுவும் துருக்கிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

விமான சேவைகள் குறைக்கப்பட்டு உள்ளதன் மூலம் விரைவில் அந்த நாட்டுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் சரியும். இது துருக்கியின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படியா பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து துருக்கி தன் தலையில் மண்ணை வாரி போட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+